இஸ்ரேல் யுத்த விமானங்கள் தாக்கி லெபனான் ஆயுத குழுவான ஹெஸ்புல்லாவின் தலைவர் ஹசான் நஸ்ரல்லா (Hassan Nasrallah) இன்று வெள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் (Beirut) தென் பகுதியிலேயே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹெஸ்புல்லா குழுவை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தவர்களில் ஒருவர் 1960ம் ஆண்டு பிறந்த நஸ்ரல்லா. கடந்த திங்கள் மட்டும் இஸ்ரேல் யுத்த விமானங்கள் 1,800 தாக்குதல்களை செய்துள்ளன. 1982ம் ஆண்டு இஸ்ரேல் லெபனானில் உள்ள பலஸ்தீனர்களை தாக்க இஸ்ரேல் படைகள் லெபனானுள் நுழைந்தபோது அவர்களை […]
இலங்கைக்கான விசா வழங்கல் மீண்டும் பழைய Mobitel இணையம் மூலம் செய்யப்படுகிறது. இந்த இணையமே நீண்ட காலமாக இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை செய்து வந்தது. ஆனால் அமைச்சர் Tiran Alles காலத்தில் இந்த பணி இலங்கையின் Mobitel நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு இந்தியாவின் VFS Global நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. VFS Global கடணங்களை மிகையாக அதிகரித்தது. VFS Global கையளிப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட, நீதிமன்றம் பழைய முறைமைக்கு மாற்றி அமைக்க பணித்தது. ஆனால் அதற்கு […]
எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் பொங்கலுக்கு தீர்வு, தீபாவளிக்கு தீர்வு என்று ஊளையிட்ட தீர்வு இன்று வரை மக்களுக்கு கிடைக்கவில்லை. அவ்வாறே ரமழானுக்கு முன் காசாவில் யுத்த நிறுத்தம், ரமழானுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம் என்று மேற்கு நாடுகள் ஊளையிட்டாலும் இதுவரை காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை. குறிப்பாக சனாதிபதி பைடென் கேட்ட யுத்த நிறுத்தங்களை இஸ்ரேல் உதாசீனம் செய்தது. அதே மேற்கு நாடுகள் தற்போது இஸ்ரேல்-ஹெஸ்புல்லா சண்டைக்கும் 21 தின யுத்த நிறுத்தம் என்று காவடி தூக்கியுள்ளன. அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, […]
இலங்கை பாராளுமன்றம் கடந்த இரவு கலைக்கப்பட்டு அடுத்த பொது தேர்தல் நவம்பர் மாதம் 14ம் திகதி இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றம் நவம்பர் 21ம் திகதி கூடும். வரும் பொது தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அக்டோபர் 4 முதல் அக்டோபர் 11ம் திகதி மதியம் 12 மணி வரை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ரணில் தான் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியதால் NPP அனுராவும், SJB சஜித்தும் மட்டுமே தற்போது பிரதான தலைவர்களாக உள்ளனர். இன்று செப்டம்பர் […]
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா (Hezbollah) ஆயுத குழுவின் நிலையங்கள் மீது இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களுக்கு இதுவரை 492 பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. பலியானோரில் 35 சிறுவர்களும், 58 பெண்களும் அடங்குவர். அத்துடன் 1,645 பேர் காயமடைந்து உள்ளனர். இஸ்ரேலின் அதிகமான தாக்குதல்கள் தெற்கு லெபனானில் இடம்பெற்றுள்ளன. அதேவேளை ஹெஸ்புல்லா திங்கள் சுமார் 250 ஏவுகணைகளையும், எறிகணைகளையும் இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளது. கடந்த கிழமை இஸ்ரேல் பொய் நிறுவனங்கள் மூலம் ஹெஸ்புல்லாவுக்கு விற்பனை செய்த வெடிமருந்து உள்ளடக்கிய pager, walkie-talkie […]
இதுவரை மியன்மாரில் (பர்மா) இராணுவ ஆட்சி செய்யும் இராணுவத்துடன் மட்டும் உறவுகளை கொண்டிருந்த இந்தியா தற்போது அந்த இராணுவத்தை எதிர்த்து போராடும் போராளி குழுக்களுடனும் உறவை ஆரம்பிக்க முனைகிறது. மியன்மாருடன் சுமார் 1,650 km எல்லையை கொண்ட இந்தியா குறைந்தது இந்திய எல்லையோரம் ஆதிக்கத்தில் உள்ள Chin, Rakhine, Kachin போராளி குழுக்களுடன் உறவை கொண்டிருப்பது அவசியமாகிறது. இந்த குழுக்களை இந்திய அரசின் பணத்தில் இயங்கும் Indian Council of World Affairs (ICWA) நவம்பர் மாத நடுப்பகுதியில் டெல்லிக்கு […]
அனுர குமார திசாநாயக்க (AKD) தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது இடதுசாரி சனாதிபதி ஆகவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான (x) மற்றும் முதல் விருப்பு வாக்குகள் (1) அனைத்தும் எண்ணிய நிலையில் அனுர 42.31% வாக்குகளையும், சஜித் 32.76% வாக்குகளையும், ரணில் 17.27% வாக்குகளையும், ஏனையோர் மிக குறைந்த அளவு வாக்குகளையும் பெற்றுள்ளனர். எவரும் 50% வாக்குகள் பெறாத நிலையில் அனுர, சஜித் ஆகிய இருவரையும் தவிர்த்து ஏனையோருக்கு கிடைத்த வாக்குகளில் அனுரவுக்கும், சஜித்துக்கும் கிடைக்கும் இரண்டாம் […]
முன்னாள் பங்களாதேஷ் அமைச்சர் ஒருவரின் $500 மில்லியன் திருட்டு சொத்துக்கள் தொடர்பாக Al Jazeera செய்தி நிறுவனம் துப்பறியும் ஆக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் Hasina ஆட்சியில் Land Minister ஆக பதவி வகித்த 55 வயது Saifuzzaman Chowdhury என்பவரே மேற்படி அமைச்சர். இவரின் லண்டன் வீடு $14 மில்லியன் பெறுமதியானது. பிரித்தானியாவில் மட்டும் இவருக்கு 360 வீடுகள் உள்ளன. அவை வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவருக்கு அமெரிக்கா, டுபாய் […]
1970 களிலும் 1980 களிலும் தத்தெடுப்பு என்ற பெயரில் திருடப்பட்ட பல்லாயிரம் தென் கொரிய சிறுவர்கள் அடிமைகள் போல் மேற்கு நாடுகளின் தத்தெடுப்போருக்கு வழங்கப்படுள்ளன என The Associated Press மற்றும் PBS Frontline செய்தி நிறுவனங்களின் ஆய்வுகள் அறிந்துள்ளன. 1975ம் ஆண்டு ஜூலை மாதம் Choi Young-ja என்ற சிறுவனும் வேறு சில சிறுவர்களும் கிருமி அழிப்பு வாகனம் ஒன்றின் பின்னே, வாகனத்தில் இருந்து வரும் புகையை பார்க்க ஓடினர். ஆனால் அந்த சிறுவன் வீடு திரும்பவில்லை. […]
ரஷ்யாவும் யூகிறேனும் சண்டையிடும் காலத்தில், ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி, இந்திய ஆயுதங்கள் யூகிறேனுக்கு வழங்கப்பட்டுள்ளன என்கிறது Reuters செய்தி நிறுவன செய்தி ஒன்று. இந்தியா தயாரித்த எறிகணைகள் (artillery shells) இத்தாலி, Czech Republic, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனைசெய்யப்பட, அவற்றை அந்த ஐரோப்பிய நாடுகள் யூகிறேனுக்கு வழங்கி உள்ளன. உதாரணமாக Yantra தயாரித்த 155mm L15A1 வகை எறிகணை இந்தியாவில் இருந்து இத்தாலி சென்று பின் அங்கிருந்து யூகிறேன் சென்றுள்ளது. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் […]