65 வயது பெண்ணை தாக்கியவன் முன்னர் தாயை கொன்றவன்

65 வயது பெண்ணை தாக்கியவன் முன்னர் தாயை கொன்றவன்

கடந்த திங்கள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த 65 வயது Vilma Kari என்ற பெண்ணை காரணம் எதுவும் இன்றி ஒரு வெள்ளையின துவேசம் கொண்டவன் தாக்கி இருந்தான். அந்த தாக்குதலை செய்த Brandon Elliot என்ற 38 வயதுடையவன் 2002ம் ஆண்டு தனது தாயை கத்தியால் வெட்டி கொலை செய்திருந்தவன் என்று அறியப்படுகிறது. Vilma Kari பிலிப்பீன் நாட்டில் இருந்து அமெரிக்கா வந்தவர் என்றும் அவரை Brandon சீன பெண் என்று […]

இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் 4 தேர்தல்கள், திடமான ஆட்சி இல்லை

இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் 4 தேர்தல்கள், திடமான ஆட்சி இல்லை

இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற 4 தேர்தல்கள் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை ஆசனங்களை வழங்கி திடமான ஆட்சியை அமைக்கவில்லை. நாலாவது தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இம்முறையும் முன்னணியில் உள்ள பிரதமர் Netanyahu கட்சியுடனான கூட்டணி மொத்தம் 120 ஆசனங்களில் 52 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளது. ஒரு கட்சியும் 60 க்கும் மேலான ஆசனங்களை கொண்டிராத நிலையில், கூட்டு ஆட்சி ஒன்றே அமையும். கூட்டு ஆட்சி அங்கு நீண்ட காலம் நிலைப்பது இல்லை. அதேவேளை அங்குள்ள […]

சுயஸ் கால்வாயில் புதைந்த கப்பல் விடுவிக்கப்பட்டது

சுயஸ் கால்வாயில் புதைந்த கப்பல் விடுவிக்கப்பட்டது

சுயஸ் கால்வாயில் புதைந்த Ever Given என்ற 400 மீட்டர் நீள பெரும் கொள்கலன் கப்பல் உள்ளூர் நேரப்படி திங்கள் பிற்பகல் 3:05 மணியளவில் புதைவில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. இதை விடுவிக்க சுமார் 30,000 சதுர மீட்டர் மணல் அகழப்பட்டு இருந்து. தற்போது Ever Given சுயமாக மிதக்கிறது. Ever Given புதைவு சுயஸ் கால்வாயை 6 தினங்கள் வழிமறித்து இருந்ததால் அங்கு சுமார் 370 கப்பல்கள் முடங்கி உள்ளன. அவை விரைவில் மீண்டும் தமது […]

கொழும்பு Port City வர்த்தக வலயம் டாலர் மயமாகும்?

கொழும்பு Port City வர்த்தக வலயம் டாலர் மயமாகும்?

கொழும்பில் ஆழ்கடலை நிரப்பி சீனாவால் உருவாக்கப்படும் Port City வர்த்தக வலயம் இலங்கை ரூபாயை தவிர்த்து, அமெரிக்க டொலர் மயமாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதவாது இந்த வர்த்தக வலயத்தில் இடம்பெறும் கொடுக்கல், வாங்கல் எல்லாம் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இலங்கை நாணயம் தொடர்ந்தும் பாரிய வீழ்ச்சியை அடைந்து வருவதால், Port City வலயம் வர்த்தக டாலர் மயமாக்கப்படல் அங்கு முதலீடு செய்பவர்களை இலங்கை நாணய வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும். அத்துடன் இங்கு வரும் […]

மொசாம்பிக் நகரை ஆயுத குழு கைப்பற்றியது, பலர் பலி

மொசாம்பிக் நகரை ஆயுத குழு கைப்பற்றியது, பலர் பலி

மொசாம்பிக் என்ற கிழக்கு ஆபிரிக்க நாட்டின் Palma என்ற எண்ணெய்வளம் கொண்ட நகரை இஸ்லாமிய ஆயுத குழு ஒன்று கைப்பற்றி உள்ளது. இந்த மோதலுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர் பலியாகி உள்ளனர். பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் தனது 1,000 ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுகிறது. பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் Palma வில் சுமார் $20 பில்லியன் செலவில் எரிவாயு (Liquefied Natural Gas) அகழ்வு வேலைகளை செய்து வந்தது. […]

போர்க்களம் ஆனது மியன்மார், இன்று 114 பேர் பலி

போர்க்களம் ஆனது மியன்மார், இன்று 114 பேர் பலி

கடந்த பெப்ருவரி 1ம் திகதி முதல் மியன்மாரில் இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இன்று சனிக்கிழமை மட்டும் குறைந்தது 114 பேர் பலியாகி உள்ளனர். இன்று சுட்டு கொலை செய்யப்பட்டோருள் 13 வயது சிறுமி ஒருத்தியும் அடங்குவர். பெப்ருவரி 1ம் திகதி முதல் இன்று வரை சுமார் 400 பேர் அங்கு பலியாகி உள்ளனர். அத்துடன் அங் சன் சு கீ உட்பட சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். […]

சீனா, ஈரான் 25 ஆண்டு வர்த்தக ஒப்பந்தம்

சீனா, ஈரான் 25 ஆண்டு வர்த்தக ஒப்பந்தம்

சீனாவும், ஈரானும் 25 ஆண்டு கால வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் இன்று சனிக்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தப்படி சீனா $400 பில்லியன் பெறுமதியான முதலீட்டை ஈரானில் செய்யும். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மத்திய கிழக்கில் ஆளுமையை செலுத்தவும் வழிவகுக்கும். சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi, ஈரான் வெளியுறவு அமைச்சர் Javad Zarif ஆகியோர் ஈரான் தலைநகர் தெகிரானில் இன்று உடன்படிக்கையில் கையொப்பம் இட்டனர். ஈரானின் வங்கித்துறை, தொலைத்தொடர்பு, துறைமுகம், வைத்தியத்துறை, தொழில்நுட்பம் ஆகிய […]

அடானியை வளர்க்கிறார் பிரதமர் மோதி?

அடானியை வளர்க்கிறார் பிரதமர் மோதி?

இந்தியாவின் தற்போதைய இரண்டாவது பெரிய செல்வந்தர் அடானியே (Gautam Shantilal Adani). அம்பானிக்கு அடுத்து தற்போது இவரே இந்தியாவின் பெரிய செல்வந்தர். இவர் 1981ம் ஆண்டில் தனது சகோதரனின் பொலித்தீன் இறக்குமதியில் தனது வர்த்தக முயற்சிகளை ஆரம்பித்து இருந்தாலும் அண்மை காலங்களிலேயே அவர் வேகமாக பெரும் செல்வந்தர் ஆனார். குறிப்பாக மோதி ஒவ்வொரு புதிய அரச கொள்கைகளை அறிமுகம் செய்யும் காலத்தில் அடானி அந்த துறையில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்து வருகிறார். நீண்ட காலமாக நிலக்கரியை பெரும் […]

பந்துல: டாலருக்கான மாற்று விகிதம் ரூபா 350 ஆகலாம்

பந்துல: டாலருக்கான மாற்று விகிதம் ரூபா 350 ஆகலாம்

அமெரிக்க டாலர் ஒன்றுக்கான இலங்கை நாணயத்தின் மாற்று விகிதம் ரூபா 250, 300 அல்லது 350 ஆகலாம் என்று கூறியுள்ளார் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன. ஆனாலும் எப்போது இலங்கை நாணயம் அந்த மாற்று விகிதங்களை அடையும் என்று அவர் கூறவில்லை. தற்போது அமெரிக்க டாலருக்கான இலங்கை நாணய மாற்று விகிதம் சுமார் Rs 200 ஆக உள்ளது. இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது ஒரு அமெரிக்க டாலருக்கான இலங்கை ரூபா மாற்று விகிதம் […]

சுயஸ் கால்வாயை தடுக்கிறது புதைந்த பெரும் கப்பல்

சுயஸ் கால்வாயை தடுக்கிறது புதைந்த பெரும் கப்பல்

சுயஸ் கால்வாய் (Suez Canal) ஊடு சென்ற மிக பெரியதோர் கொள்கலன் கப்பலின் அடிப்பாகம் மண்ணுள் புதைந்து உள்ளதால் அந்த கால்வாய் ஊடு செல்லும் கப்பல் போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டு உள்ளது. இத்தடை ஐரோப்பாவில் சில பொருட்களுக்கு தற்காலிக தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம். அங்கு எரிபொருள் விலையும் அதிகரிக்கலாம். தாய்வானின் Evergreen நிறுவனத்துக்கு சொந்தமான Ever Given என்ற கப்பலே புதைந்து உள்ளது. இந்த கப்பல் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த […]