இந்தியாவுக்கும், சவுதிக்கும் இடையே எண்ணெய் கொள்வனவு விவகாரத்தில் மோதல் தோன்றி உள்ளது. அம்மோதல் இரு தரப்பையும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. சவுதி சில தினங்களுக்கு முன் ஆசிய நாடுகளுக்கான தனது எண்ணெய் விலையை அதிகரித்து இருந்தது. அதனால் இந்தியா பரல் ஒன்றுக்கு சுமார் $1.80 அதிகமாக செலுத்தவேண்டிய நிலை தோன்றியது. சவுதியின் இந்த செயலால் இந்தியா விசனம் கொண்டது. உடனே இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை சவுதியில் இருந்து கொள்வனவு செய்யும் எண்ணெயின் அளவை குறைக்குமாறு பணித்தது. அதன்படி […]
உலகில் தற்போது 2,755 பேர் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தை கொண்டுள்ளனர். இவர்களிடம் மொத்தம் $13.1 டிரில்லியன் ($13,100 பில்லியன்) சொத்துக்கள் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக 493 பேர் பில்லியன் சொத்துடையோர் பட்டியலில் இணைந்து உள்ளனர். அமெரிக்காவின் Forbes நிறுவனம் வெளியிட்டு உள்ள கணிப்பின்படி Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos உலக அளவில் முதலாம் இடத்தில் உள்ளார். அமெரிக்கரான இவரிடம் சுமார் $177 billion ($177,000,000,000) சொத்துக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அதில் […]
Smartphone தொலைபேசி உலகில் தனக்கென இடம் ஒன்றை கொண்டிருந்த தென்கொரியாவின் LG நிறுவனம் தனது smartphone தயாரிப்பை நிறுத்தவுள்ளது. முற்கால உலக சந்தையில் LG smartphone 3ம் இடத்தை வகித்து இருந்தது. அனால் தற்காலத்தில் அது 11ம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் LG கடந்த ஆண்டு 23 மில்லியன் தொலைபேசிகளை விற்று 13% சந்தையை கொண்டிருந்தாலும், உலக அளவில் அது 2% சந்தையையே கொண்டுள்ளது. அமெரிக்காவில் iPhone 39% சந்தையையும், Samsung 30% (256 மில்லியன் தொலைபேசிகள்) […]
தமது மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாட்டில் எமிரேட்ஸ் (UAE) முன் உள்ளது. இங்கு தற்போது சுமார் 89% மக்கள் முதலாவது தடுப்பு ஊசியை பெற்றுள்ளனர். இங்கு இதுவரை மொத்தம் 8,559,291 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன. இரண்டாம் இடத்தில் சிசெல்ஸ் (Seychelles) உள்ளது. இங்கு 66% மக்கள் முதலாம் ஊசியையும், 39% மக்கள் இரண்டாம் ஊசியையும் பெற்று உள்ளனர். இங்கு 102,080 ஊசிகள் ஏற்றப்பட்டு உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள பூட்டானில் 61% மக்கள் முதலாவது […]
இந்தியாவின் சட்டிஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் மாவோஸ்ட் (Maoist) குழுவுக்கு எதிராக இடம்பெற்ற துப்பாக்கி சண்டைக்கு 23 இந்திய இராணுவத்தினர் பலியாகி உள்ளனர். அத்துடன் 31 இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர். பெருமளவு இந்திய படையினர் சனிக்கிழமை Bijipur மாவட்டத்து அடர்ந்த காட்டு பகுதி ஒன்றுள் தேடுதல் செய்தபொழுதே மேற்படி மோதல் இடம்பெற்றது. மரணித்த இராணுவத்தின் ஆயுதங்களையும் மாவோயிஸ்ட் எடுத்து சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 1960ம் ஆண்டுகளில் ஆரம்பித்த கம்யூனிஸ்ட் ஆயுத குழு இன்றுவரை […]
மத்திய கிழக்கின் ஜோர்டான் நாட்டில் முன்னாள் இளவரசர் ஒருவர் உட்பட சுமார் 30 பேர் ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ள Hamzah bin Hussein என்ற முன்னாள் இளவரசர் நிலை திடமாக தெரியவில்லை. அவருக்கான தொலைபேசி, இணைய தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டுக்காவலில் உள்ளார். அனாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்கிறது ஜோர்டான் அரசு. தனது தொடர்புகள் துண்டிக்கப்பட்டதை அவர் தனது செய்மதி தொலைபேசி மூலம் […]
அமெரிக்காவின் சனாதிபதி குடியிருக்கும் வெள்ளை மாளிகை அருகே உள்ள பாராளுமன்றத்தை ஒத்த Capitol Hill பகுதியில் இன்று வெள்ளி பிற்பகல் 1:00 மணியளவில் இடம்பெற்ற கார் தாக்குதலுக்கு ஒரு போலீசாரும், தாக்கியவரும் பலியாகி உள்ளனர். அங்கு காவலுக்கு இருந்த தடுப்பை நோக்கி வேகமாக வந்த கார் இரண்டு போலீசாரை மோதி உள்ளது. அந்த மோதலுக்கு ஒரு போலீசார் பலியாகி உள்ளார். காரை ஓட்டியவர் பின் காவல் தடுப்பில் தனது காரை மோதியுள்ளார். மோதலின் பின் காரை விட்டு […]
வெள்ளிக்கிழமை தாய்வானின் தலைநகரில் இருந்து TaiTung என்ற நகரை நோக்கி சென்ற Taroko Express என்ற அதிவேக ரயில் விபத்துக்கு உள்ளானதால் குறைந்தது 50 பேர் பலியாகியும் 146 பேர் காயப்பட்டும் உள்ளனர். மேற்படி ரயில் குகைவழி ஒன்றுள் (ChingShui Tunnel) செல்ல ஆரம்பித்த வேளையிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது. குகைவழிக்கு மேலே இருந்த கட்டுமான பார வாகனம் ஒன்று ரயிலின் பாதைக்கு குறுக்கு வழுக்கி இருந்துள்ளது. அப்போது அவ்வழி வந்த வேகமான ரயில் வீழ்ந்து இருந்த பார […]
Nathan Baggaley (வயது 45) என்ற அஸ்ரேலிய kayak ஒலிம்பிக் வீரரும் அவரின் சகோதரனும் (Dru Baggaley, வயது 39) $150 மில்லியன் பெறுமதியான, 650 kg எடை கொண்ட cocaine போதை கடத்திய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இரண்டு தடவைகள் ஒலிம்பிக்கில் silver பதக்கம் வென்ற Nathan கொள்வனவு செய்த வள்ளமே இந்த போதை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கைது 2018ம் ஆண்டு இடம்பெற்றது. அப்போது ஒலிம்பிக் வீரனின் சகோதரனும், Anthony Draper […]
செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு 3 மற்றும் 5 வயதுடைய சகோதர சிறுமிகள் மெக்ஸிகோ பக்கத்தில் இருந்து அமெரிக்காவுள் வீசப்பட்டு உள்ளனர். சகோதர சிறுமிகளை அகதி நிலைக்கு விண்ணப்பிப்பதே நோக்கம். இந்த சகோதர சிறுமிகள் Ecuador நாட்டினர் என்று அமெரிக்கா அறிந்துள்ளது. அடையாளம் காணப்படாத இரு பெரியவர் இரண்டு சிறுமிகளையும் இரவு நேரம் மெக்ஸிக்கோ பக்கத்தில் இருந்து 14 அடி உயர எல்லை வேலிக்கு மேலால் போட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த நிகழ்வு night vision வீடியோவில் […]