ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள சீன நகரமான சென்ஜென்னில் (Shenzhen) உள்ள 79 மாடி கட்டிடம் அறியப்படாத காரணம் ஒன்றால் செவ்வாய் பிற்பகல் ஆட, அங்கிருந்த ஊழியர்கள் இறங்கி தப்பி ஓடியுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட SEG Plaza என்ற இந்த மாடி ஏன் ஆடியது என்பது இதுவரை அறியப்படவில்லை. அப்பகுதியில் நிலநடுக்கம் எதுவும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று இருக்கவில்லை. வானிலை அவதானிப்பு அங்கு சுமார் 27 km காற்றே வீசியதாக கூறியுள்ளது. அவ்வகை […]
ஜப்பானில் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளின் தடுப்பில் இருக்கையில் மரணித்த Ratnayake Liyanage Wishma Sandamali என்ற 33 வயது இலங்கை பெண்ணின் மரணத்தில் அவரின் உறவினர் சந்தேகம் கொண்டுள்ளனர். மேற்படி பெண் மார்ச் மாதம் 6ம் திகதி மரணித்தார். இலங்கை பட்டதாரியான இப்பெண் இலங்கையில் இருந்து மாணவ விசா மூலம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பான் சென்று அங்கு வருமானத்துக்காக ஆங்கிலம் படிப்பிக்கவும் முனைந்துள்ளார். ஆரம்பத்தில் விசா விதிமுறைப்படி Tokyo நகருக்கு அண்மையில் உள்ள Chiba […]
தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கும், முன்னாள் சனாதிபதி ரம்புக்கும் இடையில் ஏது வித்தியாசம் என்று பைடெனின் Democratic கட்சி உறுப்பினர்கள் சிலர் தற்போது வினாவுகின்றனர். இஸ்ரேலுக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையில் நிகழும் மோதல்களை கண்டும் காணாமல் இருக்கும் பைடேனின் போக்கே இங்கு கண்டிக்கப்படுகிறது. பல்லாண்டு காலமாக மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகள் இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல்கள் இடம்பெறும்போது இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கும் உரிமை உண்டு என்று மட்டும் கூறுவார்கள். ஆனால் பலஸ்தீனர்களுக்கு தம்மை பாதுகாக்கும் உரிமை உண்டு என்று அமெரிக்கா, கனடா, […]
அரசுகள் தமது பெரும் திட்டங்களுக்கு bond கடன் மூலம் முதலீடு பெறும். அந்த bond கடனுக்கு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்ட வட்டியும், bond முதிர்வடையும் காலத்தில் முதலையும் அரசு மீள செலுத்தும். கடந்த சில காலங்களாக இலங்கை முதிர்வடையும் bond முதலீடுகளையும், வட்டிகளையும் மீள செலுத்த பணம் இன்றி அவதிப்பட்டது. இந்நிலைக்கு அரசின் தவறான திட்டங்கள், கரோனா தோற்றுவித்த பாதிப்பு போன்ற பல காரணங்கள் ஆகிய. அதனால் இலங்கை அரசின் bond ஆசியாவிலேயே விரும்பத்தகாத bond ஆகியது. அந்நிலையிலேயே […]
இன்று சனிக்கிழமை செவ்வாய் கோளத்தில் சீனா தனது கலம் ஒன்றை வெற்றிகரமாக இறக்கி உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து செவ்வாயில் கலம் ஒன்றை தரையிறக்கிய நாடாக சீனா அமைகிறது. கடந்த ஆண்டு ஜூலை 23ம் திகதி பூமியில் இருந்து சென்ற இந்த rover, 295 தினங்களின் பின் செவ்வாயை அடைந்து உள்ளது. செவ்வாய் கோளத்தில் மோதி விழுவதன் மூலம் கலங்களை அனுப்பாது, பத்திரமாக இறக்குவது மிகவும் சிரமமானது. வரும் காலங்களில் மனிதரை அங்கு அனுப்புவதற்கு இந்த அறிவு அவசியம். […]
உலக வங்கி (World Bank) மேலதிகமாக வழங்கும் $80.5 மில்லியன் பணத்தில் இலங்கை மேலும் கரோனா தடுப்பு ஊசிகளை கொள்வனவு செய்யவுள்ளது. உலக வங்கியின் COVID-19 Emergency Response and Health System Preparedness என்ற திட்டத்தின் கீழான இந்த பணத்தை பயன்படுத்தி உலக வங்கி அங்கீகரித்த தடுப்பு மருந்துகளை மருகே இலங்கை கொள்வனவு செய்ய முடியும். இந்த் திட்டத்தில் இதுவரை மொத்தம் $298.07 மில்லியன் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 925,242 பேருக்கு இலங்கையில் முதலாவது AstraZeneca […]
அமெரிக்காவின் ஓகாயோ (Ohio) மாநில ஆளுநர் Mike DeWine, அடுத்து வரும் 5 கிழமைகளுக்கு, ஒவ்வொரு கிழமையும் அங்கு தடுப்பு ஊசி போடும் ஒரு அதிஷ்டாசாலிக்கு $1 மில்லியன் வழங்க முன்வந்துள்ளார். முதலாவது அதிஷ்டாசாலியின் பெயர் மே 26ம் திகதி அறிவிக்கப்படும். அது மட்டுமன்றி தடுப்பு ஊசி பெறும் இளையோருக்கும் அம்மாநிலத்தில் குலுக்கல் மூலம் 4 ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக புலமைப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. பல்கலைக்கழக கட்டுமானம், குடியிருப்பு செலவு, புத்தக செலவு அனைத்தும் அப்பரிசில் வழங்கப்படும். அமெரிக்காவின் மத்திய […]
இஸ்ரேல், பலஸ்த்தான் பகுதிகளில் கடந்த திங்கள் முதல் வேகமாக பரவி வரும் வன்முறைகளுக்கு இதுவரை குறைந்தது 59 பேர் பலியாகி உள்ளனர். பலஸ்தீனர் பகுதியான காஸாவில் 53 பேர் பலியாகி உள்ளனர். அதில் 14 பேர் சிறுவர்கள் என்கிறது பலஸ்தீனர் தரப்பு வைத்தியசாலைகள். ஹமாஸ் என்ற ஆயுத குழு ஏவிய சிறு ஏவுகணைகளுக்கு இஸ்ரேல் தரப்பில் 6 பேர் பலியாகி உள்ளனர். இருதரப்பிலும் மொத்தமாக பலநூறு பேர் காயமடைந்தும் உள்ளனர். East Jerusalem பகுதில் ஆரம்பித்த மோதல்கள் […]
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களுக்கு குறைந்தது 30 பேர் பலியாகி உள்ளனர். அண்மையில் கிழக்கு ஜெருசலேத்தில் (East Jerusalem) மட்டும் நிலவிய மோதல்கள் தற்போது காஸாவுக்கும் (Gaza) பரவியுள்ளது. மரணித்தோருள் 28 பேர் பலஸ்தீனியர் என்றும் 2 பேர் இஸ்ரேலியர் என்றும் கூறப்படுகிறது. ஜெருசலேத்தில் போராடும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் (Hamas) குழு சுமார் 400 சிறு ஏவுகணைகளை (rockets) இஸ்ரேல் நோக்கி ஏவியது. அவற்றில் 90% ஏவுகணைகளை […]
குறைந்தது 40 சடலங்கள் கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சடலங்கள் உத்தர பிரதேச, பீகார் எல்லையிலேயே மீட்கப்பட்டு உள்ளன. இந்த உடல்கள் எப்பகுதியில் வீசப்பட்டன என்பதை அதிகாரிகள் இதுவரை அறியவில்லை. சில உள்ளூர் செய்திகள் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 150 வரையில் இருக்கும் என்று கூறுகின்றன. Buxar என்ற இடத்தில் மட்டும் திங்கள் 30 உடல்கள் எடுக்கப்பட்டு உள்ளன. சில உடல்கள் பெருமி உள்ளதாகவும், சில அரைகுறையாக எரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவை […]