சீன Belt and Road திட்டத்துக்கு போட்டியாக G7 அணியின் B3W

சீன Belt and Road திட்டத்துக்கு போட்டியாக G7 அணியின் B3W

2013ம் ஆண்டு சீனா ஆரம்பித்த Belt and Road Initiative திட்டத்துக்கு போட்டியாக G7 நாடுகள் Build Back Better World (B3W) என்ற புதியதோர் திட்டத்தை இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளன. பிரித்தானியாவின் Cornwall நகரில் கூடும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய G7 நாடுகளே இந்த அறிவிப்பை செய்துள்ளன. G7 அமைப்பில் சீனா ஒரு உறுப்பினர் நாடு இல்லை என்றாலும், சீனாவே G7 அமர்வின் பிரதான கருப்பொருளாக உள்ளது. குறிப்பாக […]

X-Press Pearl கப்பலில் இருந்து கசியும் எண்ணெய்?

X-Press Pearl கப்பலில் இருந்து கசியும் எண்ணெய்?

Planet Labs Inc. என்ற அமைப்பால் பெற்றுக்கொள்ளப்பட்ட செய்மதி படம் ஒன்று கொழும்பு கடலுள் எரிந்து தாழும் X-Press Pearl கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதை காட்டுகிறது. ஆனால் கரையோர வள அமைச்சர் Nalaka Godahewa செய்மதி படம் could be misleading என்றுள்ளார். அத்துடன் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கவலைப்படும் அளவுக்கு எண்ணெய் கசியவில்லை என்று கூறியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த கப்பலில் 25 தொன் nitric அமிலம் இருந்துள்ளது. அத்துடன் கப்பலின் பாவனைக்காகவும் […]

தடைகளை தண்டிக்க சீனாவின் புதிய சட்டம்

தடைகளை தண்டிக்க சீனாவின் புதிய சட்டம்

​வெளிநாடுகள் சீன நிறுவனங்களையோ அல்லது சீன நபர்களையோ பொருளாதார தடைகள் மூலம் தண்டிப்பதை தண்டிக்க சீனா புதிய சட்டம் ஒன்றை இன்று வியாழன் நடைமுறை செய்துள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளன மேற்கு நாடுகள். பொதுவாக அமெரிக்கா போன்ற மேற்குநாடுகளே ​இவ்வகை சட்டங்களை உருவாக்கி பிறநாட்டு நிறுவனங்களை தண்டிக்க முனையும். உதாரணமாக தாய்வானை சீனா தாக்கினால் அமெரிக்கா தாய்வானின் உதவிக்கு செல்ல வேண்டும் என்று அமெரிக்காவில் சட்டம் ஒன்று உள்ளது. ​ஒரு நாட்டுக்கு அப்பால் அந்த  நாட்டு சட்டம் […]

சீனாவில் நகரங்களை ஆக்கிரமித்துள்ள யானைகள்

சீனாவில் நகரங்களை ஆக்கிரமித்துள்ள யானைகள்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள Yunnan மாகாணத்தில் 15 யானைகளை கொண்ட கூட்டம் ஒன்று நகரங்கள் பலவற்றுள் நுழைந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. போலீசாரும், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் அவற்றை பின் தொடர்கின்றனர். அவர்கள் அட்டகாசம் செய்வது, பயிர்ச்செய்கைகளை உண்பது, உறங்குவது எல்லாம் இணையம் மூலம் மக்கள் தொடர்ந்தும் காண்கின்றனர். இந்த கூட்டத்தில் உள்ள 3 குட்டிகளே மக்களின் ஆவலை அதிகரித்து உள்ளன. இவை தற்போது 7 மில்லியன் மக்கள் வாழும் Kunming நகருக்கு அண்மையில் உள்ளன. கடந்த […]

உலக அளவில் பலநூறு கடத்தல் செய்வோர் கைது

உலக அளவில் பலநூறு கடத்தல் செய்வோர் கைது

அமெரிக்கா, அஸ்ரேலியா, நியூ சிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட போலீஸ் நடவடிக்கைகளுக்கு பலநூறு போதை மற்றும் பணம் கடத்துவோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த செய்தியை மேற்படி நாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்து உள்ளன. 2018ம் ஆண்டு முதல் Operation Trojan Shield என்ற தலைப்பில் இரகசியமாக செயல்பட்ட நடவடிக்கைகளின் பயனாகவே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. அஸ்ரேலியாவில் 224 பேர் கைது செய்யப்பட்டு 104 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. நியூ சிலாந்தில் 35 பேர் […]

கனடாவில் வாகனத்தால் மோதி 4 முஸ்லிம்கள் கொலை

கனடாவில் வாகனத்தால் மோதி 4 முஸ்லிம்கள் கொலை

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள London என்ற நகரில் 4 முஸ்லிம்கள் வாகனத்தால் மோதி கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதல் நேற்று ஞாயிறு இரவு 8:40 மணியளவில் இடம்பெற்றது. London நகரம் Toronto நகருக்கு மேற்கே சுமார் 200 km தூரத்தில் உள்ளது. Nathanial Veltman என்ற 20 வயது சந்தேகநபர் உடனேயே கைது செய்யப்பட்டு உள்ளார். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றும், Veltman மீது பயங்கரவாத […]

கனடாவில் Ryerson சிலையும் உடைப்பு

கனடாவில் Ryerson சிலையும் உடைப்பு

இன்று ஞாயிறு கனடாவின் Toronto நகரில் உள்ள Ryerson University வளாகத்தில் இருந்த Egerton Ryerson (1803 – 1882) என்பவரின் சிலையும் உடைக்கப்பட்டது. தற்கால கனடாவின் பொது கல்வி முறைமைக்கு இவரின் பங்கு பிரதானமானது என்றாலும், கனடாவின் ஆதிக்குடியினரின் குழந்தைகளை பலவந்தமாக அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்து கிறீஸ்தவ residential பாடசாலைகளை உருவாக்கவும் இவர் காரணமாக இருந்தார். இந்த பாடசாலைகளின் நோக்கம் ஆதிக்குடியினரை அவர்களின் கலாச்சாரங்களில் இருந்து பிரித்து கிறீஸ்தவ மற்றும் ஐரோப்பிய கலாச்சாரங்களில் இணைப்பதே. […]

G7 நாடுகள் குறைந்தது 15% வரி வசூலிக்க இணக்கம்

G7 நாடுகள் குறைந்தது 15% வரி வசூலிக்க இணக்கம்

உலக அளவில் இயங்கும் நிறுவனங்கள் மீது குறைந்தது 15% வருமான வரி நடைமுறை செய்ய G7 நாடுகள் இன்று சனிக்கிழமை இணங்கி உள்ளன. இந்த இணக்கம் குறிப்பாக பல நாடுகளில் இயங்கும் Apple, Facebook, Amazon, Microsoft, Twitter போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை கருத்தில் கொண்டதே. அயர்லாந்து போன்ற சில நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வருமானத்தை பெறும் நோக்கில் அவ்வகை நிறுவனங்களுக்கு குறைந்த வரியை தற்போது அறவிடுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற […]

இலச்சத்தீவிலும் ப.ஜா. இந்துவாத ஊடுருவல்

இலச்சத்தீவிலும் ப.ஜா. இந்துவாத ஊடுருவல்

சுமார் 64,000 மக்கள் வாழும் இலச்சத்தீவில் (Lakshadweep) கடந்த டிசம்பர் மாதம்வரை கரோனா தோற்றாளர் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அங்கு சுமார் 10% மக்களுக்கு கரோனா தொற்றி உள்ளது. அதற்கு பிரதமர் மோதியால் அந்த யூனியன் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்ட Praful Khoda Patel என்ற உயர் அதிகாரியே காரணம் என்று கூறப்படுகிறது. டிசம்பர் வரை அங்குள்ள 36 தீவுக்குகளுக்கு செல்லும் அனைவருக்கும் கரோனா தனிமைப்படுத்தல் முறைமை இருந்து வந்தது. ஆனால் டிசம்பர் மாதம் 2ம் திகதி […]

சீனாவில் உலகின் இரண்டாவது பெரிய நீர்மின் அணை

சீனாவில் உலகின் இரண்டாவது பெரிய நீர்மின் அணை

உலகத்தின் இரண்டாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவில் உள்ள Baihetan நீர்மின் அணைக்கட்டு ஜூலை 1ம் திகதி முதல் மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதில் உள்ள 16 மின் பிறப்பாக்கிகள் மொத்தம் 16,000 மெகாவாட் (MW) மின்னை உற்பத்தி செய்யும். உலகத்தில் முதலாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவின் Three Gorges Dam மொத்தம் 22,500 MW மின்னை உற்பத்தி செய்கிறது. சுமார் $6.3 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட Baihetan அணை 289 மீட்டர் உயரம் கொண்டது. […]