போர்த்துக்கல் நாட்டின் கால்பந்தாட்ட வீரரான Cristiano Ronaldo 2015ம் ஆண்டு நியூ யார்க் நகரில் உள்ள Trump Tower என்ற அடுக்குமாடியில் வீடு (condo) ஒன்றை $18.5 மில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தார். அது ரம்ப் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னான காலம். ஆனால் ரம்பின் 4 ஆண்டு ஆட்சியின் பின் அவரின் பெயரை கொண்ட சொத்துக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. Ronaldo கொள்வனவு செய்திருந்த வீடும் தற்போது அரை விலைக்கும் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளது. […]
சீனா இன்று சனிக்கிழமை வரை 990.25 மில்லியன் கரோனா தடுப்பு ஊசிகளை மக்களுக்கு ஏற்றி உள்ளதாக சீனாவின் National Health Commission தரவுகள் கூறுகின்றன. சீனா தயாரித்த தடுப்பு ஊசிகள் மட்டுமே அங்கு வழங்கப்படுகின்றன. சீனாவில் ஏற்றப்பட்ட தடுப்பு ஊசிகளின் தொகை உலக அளவில் ஏற்றப்பட்ட தடுப்பு ஊசிகளின் மொத்த தொகையின் 1/3 மடங்கு ஆகிறது. ஆனால் சீனாவின் சனத்தொகை உலக சனத்தொகையின் 1/5 மடங்கு மட்டுமே. சில தினங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 மில்லியன் […]
(Elavalagan, June 18, 2021) The leaders of the G7 met in Cornwall from June 11th to 13th for their 2021 Summit. At the end of the Summit they released their joint communique. The purpose of the summit and the communique was to identify the pressing issues and present ways to tackle them. But this communique […]
இந்தியாவின் பெரும் செல்வந்தர்களின் ஒருவரான அடானி (Gautam Adani) கடந்த ஒரு கிழமைக்குள் சுமார் $13.2 பில்லியன் வெகுமதியை இழந்துள்ளார். தற்போது அவரின் மொத்த சொத்துக்கள் சுமார் $63.5 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவரின் வெளிநாட்டு முதலீடுகளில் குழப்பங்கள் இருக்கலாம் என்று ஏனைய முதலீட்டாளர் கருதி அவருடனான பங்குகளை கைவிட்டதே சரிவுக்கு காரணம். இந்த மாத ஆரம்பத்தில் அடானியின் மொத்த சொத்துக்கள் சுமார் $80 பில்லியன் ஆக இருந்தது. Mauritius நாட்டில் பதிவு செய்யப்பட்ட இவரின் Albula […]
சீனா தான் அமைக்கவுள்ள China Space Station (CSS) என்ற விண்வெளி ஆய்வு கூடத்தில் பணியாற்ற 3 விண்வெளி வீரரை இன்று வியாழன் ஏவி உள்ளது. சீனாவின் விண்வெளி ஆய்வுகூட கட்டுமானம் மொத்தம் 11 ஏவல்களை கொண்டிருக்கும். சீனாவின் கோபி பாலைவனத்தில் (Gobi Desert) இருந்து இன்று ஏவப்பட்டது 3 வது ஏவலாகும். இன்றைய ஏவலில் 56 வயதுடைய Nie Haisheng, 54 வயதுடைய Liu Boming, 45 வயதுடைய Tang Hongbo ஆகியோரே பயணிக்கின்றனர். முதலில் […]
அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கும், ரஷ்ய சனாதிபதி பூட்டினுக்கும் இடையிலான இன்றைய மாநாடு எதிர்பார்த்திலும் விரைவாக முடிந்துள்ளது. மொத்தம் 5 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டாலும், மாநாடு 4 மணித்தியாலங்களுள் நிறைவு பெற்றது. இருதரப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அணுவாயுத யுத்தம் வெற்றியை அளிக்காது என்றும், அணுவாயுத யுத்தம் நிகழக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரு தரப்பும் தமது தூதுவர்களை மீண்டும் செயற்பட வைக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்றைய பல விசயங்களில் தீர்மானங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை அறியப்படவில்லை. விசனம் கொண்ட […]
Julie Jiyoon Chung என்பவர் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் இலங்கை, மாலைதீவு ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தூதுவராவார். இந்த அறிவிப்பை வெள்ளைமாளிகை இன்று செவ்வாய் வெளியிட்டு உள்ளது. தென்கொரியாவில் பிறந்த இவர் தனது 5 வயதில் பெற்றாருடன் அமெரிக்கா சென்றிருந்தார். இவர் ஆங்கிலம், சீன, கொரியன், ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, கம்போடிய Khmer, ஸ்பானிஸ் மொழிகளை கற்றவர். இவர் ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவின் Bureau of Western Hemisphere Affairs திணைக்களத்தின் […]
வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகளுக்கு முன் குந்தியிருந்தவர்களை கணனி பெட்டிகளுக்கு முன் குந்த வைத்தது Microsoft நிறுவனம் தயாரித்த Windows என்ற கணனி operating system (OS). அதன் தற்கால வெளியீடு Windows 10. ஆனால் Microsoft நிறுவனம் இந்த மாதம் 24ம் திகதி புதிய Windows வெளியீட்டை அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வெளியீடு Windows 11 என்று அழைக்கப்படாது வேறு பெயரை கொண்டிருக்கலாம். Windows Sun Valley என்று அழைக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. […]
இந்தியாவின் மிசோராம் (Mizoram) மாநிலத்தில் 39 மனைவிகளையும், 84 பிள்ளைகளையும் கொண்ட Ziona Chana என்பவர் 76 வயதில் மரணமாகி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை மரணித்த இவருக்கு 33 பேரப்பிள்ளைகளும் உண்டு. இந்த செய்தியை மிசோராம் மாநில முதலமைச்சர் அறிவித்து உள்ளார். Ziona அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ குழு (Christian sect) ஒன்றின் தலைவர். இவர் தனது குடும்பத்துடன் 4-மாடி கட்டிடம் ஒன்றில் வாழ்ந்திருந்தார். Baktawng என்ற கிராமத்தில் உள்ள இந்த மாடியில் 100 அறைகள் உள்ளன. இவரின் […]
சுமார் 12 ஆண்டுகள் இஸ்ரேலில் பிரதமராக ஆட்சி செய்த நெட்டன்யாகுவை (Netanyahu) விரட்டி, எதிர்க்கட்சிகள் புதியதோர் கூட்டு அரசை இன்று ஞாயிரு அமைத்து உள்ளன. இந்த 8-கட்சி கூட்டு அரசு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாவிட்டாலும், இதுவரை சந்தர்ப்பவசமாக பிரதமர் பதவியில் இருந்த நெட்டன்யாகு இன்று விரட்டப்பட்டு உள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் இஸ்ரேலில் 4 தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை பெற்று இருக்கவில்லை. அதனால் நெட்டன்யாகுவே தொடர்ந்தும் […]