கசாவின் வடக்கே உள்ள Beit Lahia என்ற இடத்தில் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை வீசிய குண்டு ஒன்றுக்கு 93 பேர் பலியாகி உள்ளனர். அதில் 25 பேர் சிறுவர்கள். தாம் ஒரு சந்தேக ஒருவரை நோக்கி வீசிய குண்டுக்கு எவ்வாறு 93 பலியாகினர் என்று தெரியாது என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. ஒருவரை கொலை செய்ய 100 பேரை கொலை செய்யக்கூடிய குண்டை வீசும் இராணுவமா இஸ்ரேல் இராணுவம்? தாக்குதலுக்கு உள்ளானோர் அப்பகுதியில் உள்ள Kamal Adwan என்ற வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அந்த […]
பலஸ்தீன அகதிகளுக்கு உதவி செய்வதற்கு 1967ம் ஆண்டு ஐ.நா. உடன்படிக்கை ஒன்று மூலம் உருவாக்கப்பட்ட UN Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 2 சட்டங்கள் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு சட்டங்களில் ஒன்று UNRWA இஸ்ரேலில் இயங்குவதை தடை செய்கிறது. பாராளுமன்றத்தில் இது 92 ஆதரவு வாக்குகளையும், 10 எதிர்ப்பு வாக்குகளையும் பெற்று சட்டமாகியது. மற்றையது இஸ்ரேல் அதிகாரிகள் UNRWA வுடன் தொடர்பு கொள்வதை தடை செய்கிறது. இது […]
இந்தியாவின் Shreya Life Sciences என்ற மருந்து ஆய்வு நிறுவனம் ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் Dell நிறுவனம் தயாரித்த PowerEdge XE9680 வகை server களை விற்பனை செய்துள்ளது என்று Bloomberg செய்தி நிறுவனம், ImportGenius, NBD ஆகியன கூட்டாக அறிந்துள்ளன. Shreya மொத்தம் 1,111 இவ்வகை Dell sever களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த sever களில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு தடை செய்யப்பட்ட NVIDIA H100 chip உள்ளன. இவை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் […]
நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 26) இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான National People’s Party (NPP) கட்சி மொத்தம் 30 ஆசனங்களில் 15 ஆசனங்களை வென்றுள்ளது. இப்பகுதியில் இம்முறை NPP 47.6% வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த சனாதிபதி தேர்தலில் NPP இங்கே 51.4% வாக்குகளை பெற்று இருந்தது. சஜித் தலைமையிலான SJB கட்சி 6 ஆசனங்களையும், SLPP கட்சி 3 ஆசனங்களையும், People’s Alliance கட்சி 2 ஆசனங்களையும் வென்றுள்ளன. […]
ஈரான் நேரப்படி இன்று சனி காலை இஸ்ரேல் தாக்குதல் செய்கிறது. தாம் ஈரானின் இராணுவ நிலையங்களை மட்டும் தாக்குவதாக கூறியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் முன்னறிவிப்பை அமெரிக்காவுக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளது. ஆனால் அமெரிக்கா தான் தாக்குதலில் பங்கெடுக்கவில்லை என்று கூறியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹிரானில் சனி அதிகாலை குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தாக்குதல் ஏற்படுத்திய சேதங்கள் இதுவரை அறியப்படவில்லை.
காசாவில் பலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேலிய படைகள் மனித கேடயமாக பயன்படுத்துவதாகவும், பொறிகள் இருக்கும் என்றுகருதப்படும் வீடுகளை, அறைகளை பரிசோதிக்க சிறுவர்கள் உட்பட பொதுமக்களை முதலில் அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. ஒரு இஸ்ரேலிய படையினன் ஒருவரும், 5 பலஸ்தீனரும் வழங்கிய உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனம் ஆக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தாம் புக பயப்படும் இடங்களுக்கு பலஸ்தீன பொதுமக்களை அனுப்புவதை இஸ்ரேல் படையினர் “mosquito protocol” என்று அழைப்பதாகவும் மேற்படி படையினன் கூறியுள்ளார். அதற்காக தாம் இரண்டு பலஸ்தீன சிறுவர்களை பிடித்து […]
இலங்கையில் உள்ள யூத உல்லாச பயணிகள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் “Level 4” எச்சரிக்கையை விடுத்துள்ளன. குறிப்பாக அறுகம் குடா மற்றும் அகங்கம, காலி, ஹிக்கடுவ, வெலிகம ஆகிய இடங்களில் உள்ள யூதர்களை உடனடியாக இந்த பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேற கேட்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இலங்கையை விட்டு வெளியேறுமாறும், அல்லது கொழும்புக்கு நகருமாறும் இவர்கள் கேட்கப்பட்டுள்ளனர். யூத பயணிகளை ஹீபுறு (Hebrew) எழுத்துக்கள் கொண்ட ஆடைகள் போன்ற யூத அடையாளங்களை கொண்டிருக்க வேண்டாம் […]
இந்தியாவில் செய்மதி மூலமான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் உரிமையை பெற இந்தியாவின் முகேஷ் அம்பானியும், அமெரிக்காவின் இலான் மஸ்க்கும் (Elon Musk) கடுமையாக போட்டியிடுகின்றனர். அம்பானி இந்திய அரசு செய்மதி தொடர்புக்கு பயன்படும் அதிர்வெண் பகுதியை (frequency spectrum) ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்கிறார். அம்முறையில் அம்பானி உரிமையை பெற்றால் இந்திய செய்மதி தொலைத்தொடர்பு சந்தையை அவர் முற்றாக கட்டுப்படுத்தலாம். ஆனால் மஸ்க் இந்திய அரசு அதிர்வெண் உரிமையை தன்னகத்தே கொண்டு, அவற்றை பயன்படுத்தும் […]
அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் தயாரித்த 2025ம் ஆண்டுக்கான சிறந்த உல்லாச பயண இடங்கள் பட்டியலில் இலங்கை 24ம் இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெறுவது உலக அளவிலான உல்லாச பயண சந்தையில் இலங்கைக்கு பெரும் விளம்பரத்தை வழங்கும். 2024ம் ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 2023ம் ஆண்டு இந்த பட்டியலில் இலங்கையின் Tangalle நகரம் மட்டும் 7ம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு முழு நாடும் 24ம் இடத்தில் உள்ளது. Top 25 Places […]
இன்று திங்கள் அஸ்ரேலிய பாராளுமன்றம் சென்ற பிரித்தானிய அரசர் சார்ல்ஸுக்கு (King Charles III) அஸ்ரேலிய பூர்வீக குடியினரான செனட்டர் Lidia Thorpe கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் வந்த அரசரிடம் “This is not your land”, “You are not my king”, “You committed genocide against our people”, “Give us what you stole from us” என்று சத்தமிட்டுள்ளார் Lidia Thorpe. சத்தமிட்ட இவரை பாதுகாப்பு அதிகாரிகள் சபைக்கு வெளியே அழைத்து சென்றனர். கனடிய […]