தேயிலை ஏற்றுமதில் இலங்கையை பின் தள்ளிய இந்தியா 

தேயிலை ஏற்றுமதில் இலங்கையை பின் தள்ளிய இந்தியா 

2023ம் ஆண்டு உலகத்தில் அதிக அளவு Black tea (அல்லது Red tea) என்ற பதப்படுத்தப்பட்ட (fermented) தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை கென்யாவுக்கு பின்னால் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு இந்தியா இலங்கையை 3ம் இடத்துக்கு பின் தள்ளி 2ம் இடத்தை அடைந்துள்ளது. 2023ம் ஆண்டு 231 மில்லியன் kg தேயிலையை ஏற்றுமதி செய்த இந்தியா 2024ம் ஆண்டு 255 மில்லியன் kg தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய தேயிலை […]

சீனாவின் கால்களை கொண்ட கப்பல், தரை இறங்கலுக்கு வசதி 

சீனாவின் கால்களை கொண்ட கப்பல், தரை இறங்கலுக்கு வசதி 

சீனா கால்களை கொண்ட தோனி வகை கப்பல்களை (barges) தயாரித்தமை மேற்குநாடுகளை மிரள வைத்துள்ளது. இவ்வகை கப்பல்கள் சீனா இன்னோர் நாட்டின் பாதுகாக்கப்பட்ட கரைகளை தாண்டி தனது படைகளை தரையிறக்கம் செய்ய பெருமளவில் உதவும் என்று கருதப்படுகிறது. ஒரு இராணுவம் துறைமுகம் இல்லாத கடற்கரையில் தரை இறங்கும்போது படைகள், அவர்களின் கவச வாகனங்கள், பிரங்கிகள் போன்றவற்றை தரை இறக்க சிரமப்படும். கடல் அலைகள் தரை இறங்கும் கப்பல்களை அங்கும் இங்கும் ஆசைப்பதால் தரை இரங்கல் பணிக்கு ஆபத்து […]

Tesla வை பின் தள்ளிய BYD, கடந்த ஆண்டு $107 பில்லியன் விற்பனை 

Tesla வை பின் தள்ளிய BYD, கடந்த ஆண்டு $107 பில்லியன் விற்பனை 

இலான் மஸ்க்கின் (Elon Musk) பெரும்பான்மை உரிமை கொண்ட அமெரிக்காவின் Tesla என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனத்தின் வருமானத்தை பின் தள்ளி கடந்த ஆண்டு சீனாவின் BYD என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனத்தின் விற்பனை $107 பில்லியனுக்கும் அதிகமாகி உள்ளது. அத்துடன் BYD யின் நிகர இலாபமும் (net profit) 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34% ஆல் அதிகரித்து $5.5 பில்லியன் (40.3 பில்லியன் யுவான்) ஆகியுள்ளது. 2024ம் ஆண்டு Tesla வின் வருமானம் […]

கனடாவில் ஏப்ரல் 28 பொது தேர்தல்

கனடாவில் ஏப்ரல் 28 பொது தேர்தல்

கனடாவின் முன்னாள் பிரதமர் ரூடோ விரட்டப்பட்ட பின் உட்கட்சி வாக்கெடுப்பு மூலம் பிரதமராகிய மார்க் கார்னி (Mark Carney) வரும் ஏப்ரல் 28ம் திகதி பொது தேர்தலை கொண்டிருக்க அறிவித்துள்ளார். அத்துடன் இதுவரை தேர்தலில் போட்டியிடாத மார்க் கார்னி தலைநகர் Ottawa வுக்கு அண்மையில் உள்ள Nepean தொகுதிலும் போட்டியிடுகிறார். ரூடோ ஆட்சி காலத்தின் இறுதி பகுதியில் அவரின் லிபெரல் (Liberal) கட்சி படுதோல்வி அடையும் நிலையிலேயே இருந்தது. அதனாலேயே ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். […]

யூக்கிறேன் கைப்பற்றிய Kursk பகுதியை ரஷ்யா மீட்டது

யூக்கிறேன் கைப்பற்றிய Kursk பகுதியை ரஷ்யா மீட்டது

ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் யூக்கிறேன் செய்த வியத்தகு இராணுவ நடவடிக்கைகளில் ஒன்று சுமார் 1,376 சதுர km பரப்பளவு கொண்ட Kursk என்ற எல்லையோர ரஷ்ய பகுதியை கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது. ரஷ்யா இங்கே பலத்த பாதுகாப்பு எதையும் கொண்டிருக்கவில்லை. 1941ஆண்டு ஹிட்லரின் படைகள் ரஷ்யாவை ஆக்கிரமித்த பின் அந்நிய படை ஒன்று ரஷ்யாவை ஆக்கிரமித்தது இதுவே முதல் தடவை. இதற்கு அமெரிக்காவின் ஆயுத உதவியும், புலனாய்வு உதவியும் மிகவும் உதவின. ஆனால் சனாதிபதி […]

லண்டன் விமான நிலையம் வெள்ளி முற்றாக முடக்கம், தீ காரணம் 

லண்டன் விமான நிலையம் வெள்ளி முற்றாக முடக்கம், தீ காரணம் 

பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Heathrow விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை முற்றாக மூடப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு அருகில் உள்ள substation மின்மாற்றி ஒன்றில் தீ பற்றிக்கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. மின்மாற்றி ஏன் தீ பற்றியது என்பது இதுவரை அறியப்படவில்லை. இதனால் லண்டன் Heathrow செல்லும் மற்றும் அங்கிருந்து செல்லும் சுமார் 1,350 விமான சேவைகள் இன்று வெள்ளி தடைபட்டு உள்ளன. Heathrow விமான நிலையத்துக்கு அருகில் உள்ள North Hayes என்ற […]

இந்தியாவை நீங்கி சீனா செல்லும் வெளிநாட்டு முதலீடுகள்

இந்தியாவை நீங்கி சீனா செல்லும் வெளிநாட்டு முதலீடுகள்

இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டவரும், வெளிநாட்டு நிறுவனங்களும் கடந்த 6 மாதங்களில் சுமார் $29 பில்லியன் பங்குச்சந்தை முதிலீடுகளை இந்தியாவில் இருந்து பின்வாங்கி அவற்றை சீனாவில் முதலீட்டு உள்ளனர். இவ்வாறு வெளிநாட்டவர் தமது முதலீடுகளை பின்வாங்கியதால் இந்தியர் சிலரும் தமது முதலீடுகளை பின்வாங்கியதால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 மாத காலத்தில் சுமார் $1 டிரில்லியன் (1,000 பில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளன. சீனாவின் நிறுவனங்கள் தமது பங்குகளை விற்பனை செய்யும் ஹாங் காங் Hang Seng […]

யூக்கிறேன் பேச்சில் பூட்டின் ரம்புக்கு வழங்கிய தோல்வி 

யூக்கிறேன் பேச்சில் பூட்டின் ரம்புக்கு வழங்கிய தோல்வி 

செவ்வாய்க்கிழமை அமெரிக்க சனாதிபதி ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் யூக்கிறேன் யுத்தம் தொடர்பாக உரையாடினார். ரம்ப் சனாதிபதி ஆனபின் செய்துகொண்ட பெரிய உரையாடல் இதுவே. ரம்ப் தரப்பு இதில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. ஆனாலும் ரம்பின் எதிர்பார்ப்புகளுக்கு பூட்டினுக்கு பலத்த தோல்வியை வழங்கி உள்ளார். ரம்ப் குறிப்பிடக்கூடிய அளவு யுத்த நிறுத்தம் ஒன்றையே பூட்டினிடம் எதிர்பார்த்தார். அவ்வகை அறிவிப்பு ரம்புக்கு தான் ஒரு ‘deal maker’ என்று பறைசாற்ற உதவியிருக்கும். ஆனால் பூட்டின் 30 தினங்களுக்கு யூக்கிறேன் […]

யுத்த நிறுத்தத்தை முறித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் 

யுத்த நிறுத்தத்தை முறித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் 

இஸ்ரேல் அவ்வப்போது யுத்த நிறுத்தத்துக்கு செல்வது முடிந்த அளவு ஹமாஸின் கைகளில் உள்ள இஸ்ரேலியரை கைக்கொள்ளவே. இதை இஸ்ரேல் பல தடவைகள் செய்துள்ளது. இன்று செவ்வாய் அதிகாலையும் இஸ்ரேல் தான் இணங்கிக்கொண்ட யுத்த நிறுத்தத்தை மீறி காசா மீது மீண்டும் தாக்கத்தலை ஆரம்பித்து உள்ளது. கடந்த யுத்த நிறுத்த நாடகத்திலும் இஸ்ரேல் பல இஸ்ரேல் கைதிகளை ஹமாஸிடம் இருந்து பெற்றுள்ளது. உலகுக்கு மனித நேய பாடம் புகட்டும் நரிக்குணம் கொண்ட மேற்கு நாடுகள் தன் கையில் இருப்பதால் […]

Voice of America வை மூடிவிட ரம்ப் தீர்மானம் 

Voice of America வை மூடிவிட ரம்ப் தீர்மானம் 

பல சந்ததிகளாக உலகம் எங்கும் அமெரிக்க சார்பு பரப்புரைகளை ஒலி/ஒளி பரப்பி வந்த அமெரிக்காவின் Voice of America (VoA) பரப்புரை சேவையை முற்றாக நிறுத்திவிட அமெரிக்க சனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். VoA தனக்கும், வலதுசாரிகளுக்கும் எதிரான கொள்கைகளை கொண்டுள்ளது என்று ரம்ப் குறைகூறி உள்ளார். Mike Abramowitz என்ற VoA சேவையின் Director தன்னையும், VoA அமைப்பின் 1,300 ஊழியர்களையும் சம்பளத்துடனான கட்டாய விடுப்பில் அரசு வைத்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த காலங்களில் சோவியத்/ரஷ்யா, சீனா, இந்தியா, […]

1 2 3 349