Oxford University-AstraZeneca தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் இன்று திங்கள்கிழமை இடைநிறுத்தி உள்ளன. இந்த மருந்து சிலரில் இரத்தம் திரண்டு கட்டி (blood clot) ஆவதற்கு காரணமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரத்தம் திரண்டு கட்டி ஆனால், இரத்த ஓட்டம் தடைப்படும். அது உயிருக்கு ஆபத்தானது.
ஏற்கனவே நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, பல்கேரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, Congo போன்ற நாடுகள் AstraZeneca தடுப்பு மருந்தை இடைநிறுத்தம் செய்து உள்ளன.
ஐரோப்பாவின் வைத்திய அமைப்பான European Medicines Agency (EMA) ஐரோப்பா சார்பில் AstraZeneca தடுப்பு மருந்து தொடர்பான விசயத்தை ஆராய்ந்து முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. EMA வரும் வியாழக்கிழமை இது தொடர்பாக உரையாட கூடவுள்ளது.
உலக அளவில் இதுவரை சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் சுமார் 40 பேருக்கே இரத்தம் திரண்டு உள்ளது. அது சுமார் 0.0002% மட்டுமே.
உலக சுகாதார அமைப்பான WHO தொடர்ந்தும் AstraZeneca மருந்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனாலும் இரத்தம் திரையும் விசயத்தை ஆராய்ந்தும் வருகிறது.
கரோனா தடுப்பு மருந்து பாவனை:
Pfizer மருந்து: 70 நாடுகள்
AstraZeneca மருந்து: 65 நாடுகள்
Moderna மருந்து: 32 நாடுகள்
Sinopharm மருந்து: 19 நாடுகள்
Sputnik மருந்து: 17 நாடுகள்
Sinovac மருந்து: 11 நாடுகள்