இந்தியா Arighaat என்ற தனது இராண்டாவது Arihant வகை அணு மின் நீர்மூழ்கியை இன்று வியாழன் விசாகப்பட்டினத்தில் சேவைக்கு விட்டுள்ளது.
இது மூழ்கிய நிலையில் 24 knots/hour (44 km/h) வேகத்தில் பயணிக்க வல்லது.
இந்த 6,000 தொன் எடை கொண்ட நீர்மூழ்கி K-15 வகை அணு குண்டு ஏவுகணைகளை கொண்டிருக்கும். K-15 ஏவுகணை 750 km தூரம் சென்று தாக்க வல்லது.
முதலாவது Arihant வகை நீர்மூழ்கி 2016ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்தது.
அணு மின் நீர்மூழ்கிகளை கொண்ட 6 நாடுகள்:
1) அமெரிக்கா: அணுமின் 68 (மொத்தம் 68)
2) ரஷ்யா: அணுமின் 29 (மொத்தம் 49)
3) சீனா: அணுமின் 12 (மொத்தம் 59)
4) பிரித்தானியா: அணுமின் 11 (மொத்தம் 11)
5) பிரான்ஸ்: அணுமின் 8 (மொத்தம் 8)
6) இந்தியா: அணுமின் 2 (மொத்தம் 17)
மொத்தம் 42 நாடுகள் 486 நீர்மூழ்கிகளை கொண்டுள்ளன, ஆனால் 6 நாடுகள் மட்டுமே அணுமின் நீர்மூழ்கிகளை கொண்டுள்ளன.