APEC அமர்வு இணக்கம் இன்றி முடிவு

APEC

நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் பப்புவா நியூ கினியில் (Papua New Guinea) இடம்பெற்ற APEC (Asia-Pacific Economic Cooperation) அமர்வு இறுதி இணக்கம் இன்றி முடிவடைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட APEC இந்த வருடமே முதல் முறையாக இறுதி இணக்கம் (joint statement) இன்றி முடிந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக யுத்தமே இந்த இணக்கம் இன்மைக்கு காரணம்.
.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 19 நாடுகளும், தாய்வான், ஹாங் காங் ஆகிய இரண்டு வர்த்தகங்களும் இணைந்து வர்த்தக முன்னெடுப்புகளை இந்த அமர்வில் திட்டமிட்டு வந்துள்ளன.
.
ஆனால் சீனாவின் Belt-and-Road நடவடிக்கைகளை விரும்பாத அமெரிக்கா சீனாவை கண்டிக்கும் கருத்துக்களை இறுதி இணக்கத்தில் புகுத்த விரும்பியது. அதை எதிர்த்த சீனா, ரம்ப் தலைமயிலான அமெரிக்காவின் தன்னிச்சை போக்கை இணக்கத்தில் கண்டிக்க விரும்பியது. இறுதியில் எந்தவித இணக்கமும் இன்றி அமர்வு நிறைவு பெற்றது.
.
உலகின் 60% வர்த்தகத்தை கொண்டுள்ள APEC நாடுகளின் இடையே உள்ள முரண்பாடுகள் வர்த்தக உலகத்தை கவலைகொள்ள வைத்துள்ளது.
.
அடுத்த அமர்வு Chile நாட்டில் இடம்பெறும்.

.