Angela Merkel அரசியலுக்கு முழுக்கு

AngelaMerkel

ஜெர்மன் நாட்டின் அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இன்று திங்கள் கூறியுள்ளார். அவர் தனது தற்போதைய பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும்வரை பதிவியில் இருக்கவுள்ளதாகவும், ஆனால் அதன் பின் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
.
அண்மைக்கால தேர்தல்களில் அவரின் தலைமையிலான கூட்டணி பலத்த தோல்விகளை சந்தித்து வருவதே இவரின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் மத்திய மாநிலம் ஒன்றில் சுமார் 5 வருடங்களுக்கு முன் 38% வாக்குகளை பெற்ற இவரின் அணி நேற்று ஞாயிற்றுக்கிழமை 27% வாக்குகளை மட்டுமே வென்றிருந்தது.
.
இவர் தனது Christian Democratic கட்சியை 18 வருடங்களும், ஜெர்மனியை 13 வருடங்களும் தலைமை தாங்கி உள்ளார்.
.
இவர் அகதிகளுக்கு பெரும் ஆதரவு வழங்கியவர். அவரின் அந்த கொள்கையே அவருக்கு பாதகமாக மாறியுள்ளது. இவரால் 2021 ஆம் ஆண்டுவரை தற்போதைய பதவியில் நிலைக்க முடியுமா என்பதுவும் கேள்விக்குறியே.
.
இவரின் ஆட்சி காலத்தில் வலதுசாரி AfD கட்சியும், Green கட்சியும் பலமாக வளர்ந்தன.
.