இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் டெல்கி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள Amnestry International அலுவலகங்கள் மீது திடீரென தேடுதல் நடவடிக்கைகளை செய்துள்ளது இந்தியாவின் மத்திய புலனாய்வு திணைக்களம் (CBI). அதனால் விசனம் கொண்டுள்ளது Amnestry International.
.
காஸ்மீரில் இந்திய படைகள் செய்யும் வன்முறைகளை தாம் பகிரங்கம் செய்வதாலேயே தம் மீது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறுகிறது Amnestry. கடந்த ஒரு வருட காலமாக தம் மீது இந்திய அரசு இவ்வாறான நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் Amnestry கூறியுள்ளது.
.
கடந்த ஜூன் மாதம் Amnestry அமைப்பு “Tyranni of a Lawless Law” என்ற அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் விசாரணை இன்றிய தடுத்துவைப்பு போன்ற பல காஸ்மீர் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
.
ஆனால் இந்திய அரசு தாம் ” Foreign Contribution (Regulation) Act, 201″ சட்டத்துக்கு அமையவே தேடுதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளது.
.