Amazon உள்ளும் இலஞ்சம், ஊழல்

Amazon உள்ளும் இலஞ்சம், ஊழல்

அளவுக்கு மீறி வளர்ந்த Amazon என்ற இணையம் மூலமான விற்பனை நிறுவனம் அதனுள்ளே வளரும் இலஞ்சம், ஊழல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க பெரும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி உள்ளது. Amazon வர்த்தக நடவடிக்கைகளில் இலஞ்சம், ஊழல் செய்தோர் என்று கூறி அண்மையில் 6 முன்னாள் பணியாளர் மீது அமெரிக்கா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

Ed Rosenberg, Joseph Nilsen, Kristen Leccese, Hadis Nuhanovic, Rohit Kadimisetty, Nishad Kunju ஆகியோர் மீதே அமெரிக்க மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இவர்கள் Amazon மூலம் விற்பனை செய்வோர் சிலரிடம் இருந்து இலஞ்சம் பெற்று, அந்த விற்பனையாளருக்கு சட்டத்துக்கு முரணான முறையில் உதவி செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. உண்மையில் பெரும் தொகையான Amazon ஊழியர்கள் குளறுபடியில் ஈடுபடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

Kadimisetty தனது Amazon பதவியை 2015 ஆண்டு டிசம்பர் மாதம் இழந்து இருந்தார். Kunju 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Amazon பதிவியில் இருந்து விலக்கப்பட்டார்.

பதவியில் இருந்து விரட்டப்பட்ட Kanju பின்னரும் Nilsen உடன் இனைந்து ஏற்கனவே Amazonனில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொருள் ஒன்றை மீண்டும் Amazonனில் விற்பனை செய்ய வழி செய்தார். அந்த செயலுக்கு Kanju பாதுகாப்பு குறைபாடு கொண்ட பொருளை விற்பனை செய்யும் நிறுவனத்திடம் $5,700 வெகுமதியை சட்ட விரோதமாக பெற்று உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பணம் இந்தியாவுக்கு wire transfer செய்யப்பட்டு அங்குள்ள Amazon ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Nilsen, Leccese, Kunju ஆகியோர் அதே மாதம் Amazon னில் விற்பனை செய்யும் ஒரு நிருவத்திடம் $25,000 பெற்று, அந்த நிறுவனத்துக்கு போட்டியாக Amazon னில் பொருட்களை விற்பனை செய்யும் இன்னோர் நிறுவனத்துக்கு எதிராக பொய்யான வாடிக்கையாளர் கருத்துக்களை (negative reviews) வெளியிட்டு உள்ளனர். மேற்படி negative review களை வாசிக்கும் மக்கள் அப்பொருளை கொள்வனவு செய்யார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் Rosenberg $8,000 பணம் கொண்ட பொதி ஒன்றை Uber taxi மூலம் Nilsen க்கு அனுப்பி உள்ளார். இப்பணமும் Amazon குளறுபடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

தாம் முடிந்தவரை தமது ஊழியர்கள் செய்யும் சட்ட விரோத செயல்களை தடுக்க முயல்வதாக Amazon கூறி உள்ளது.