Al Coreஇன் தொலைக்காட்சியை வாங்கும் Al Jazeera

கட்டார் நாட்டின் தலைநகரான Dohaவில்  தலைமையகத்தை கொண்ட Al Jazeera என்ற தொலைக்காட்சி சேவை நிறுவனம் முன்னாள் அமெரிக்க உதவி ஜனாதிபதி Al Gore பெரும்பாக உரிமை கொண்டிருந்த Current Media என்ற நிறுவனத்தை கொள்வனவு செய்கிறது. விற்பனை விலை இதுவரை வெளியாகவில்லை, ஆனால் விலை சுமார் $500 மில்லியன் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Al Jazeera 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 15 ஆம் திகதி தனது சேவையை தொடங்கியது. அரபு நாடு ஒன்று இதன் பிரதான உரிமையை கொண்டிருந்தாலும் இதில் வேலை செய்வோர் பலரும் முன்னர் ABC, BBC, CNN, ITN போன்ற பிரபல மேற்கு நாட்டு நிறுவனங்களில் பதவி வகிக்தவர்களே. ஆனாலும் Al Jazeeraவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் பலத்த அரசியல் தடைகள் உருவாகின.

2007 ஆம் ஆண்டு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனமான Comcast அமெரிக்காவில் Al Jazeeraவின் சேவையை வழங்க திட்டமிட்டதாயினும் இறுதி நேரத்தில் அத்திட்டத்தை கைவிட்டது. DirectTV, Dish Network போன்ற நிறுவனங்களும் அவ்வாறே இறுதி நேரத்தில் தமது திட்டங்களை கைவிட்டன. இதற்கும் மேலாக சில அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் Al Jazeeraவை அமரிக்க எதிர்ப்பு நிறுவனமாக அடையாளம் காட்டின. அனால் விரைவில் எதிர்ப்பு வலு இழக்க தொடங்கியது.

அண்மையில் ஹில்லரி கிளின்ரன் (Hillary Clinton) “viewership of Al Jazeera is going up in the United States because it’s real news. You may not agree with it, but you feel like you’r getting real news around the clock instead of a million commercials…”

YouTube:

http://www.youtube.com/watch?v=5zW4AKrOIak

Current Mediaவின் கருத்துப்படி அவர்களின் சேவையை உலகெங்கும் 71 மில்லியன் வீடுகள் பார்வையிடுகின்றன. மரிகாவில் மட்டும் 60 மில்லியன் வீடுகள் பார்வையிடுகின்றன.