Air India விற்பனைக்கு

AirIndia

இந்தியாவின் அரச சொத்தான Air India விமான சேவையை தனியார் வசப்படுத்த இந்திய அரசு தீர்மானம் கொண்டுள்ளது. கடந்த மாதம் இந்திய அரசு இந்த முடிவை நிறைவேற்றி இருந்திருந்தாலும் இதுவரை எந்தவொரு தனியார் நிறுவனமும் Air Indiaவை கொள்வனவு செய்ய முன்வரவில்லை.
.
நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கிவரும் Air India விமான சேவைக்கு சுமார் 520 பில்லியன் ($8 பில்லியன்) ரூபாய்கள் கடன் உள்ளது. அத்துடன் இந்த சேவை வருடம் ஒன்றுக்கு Air India 45 பில்லியன் ரூபாய்களை வட்டியா செலுத்தல் வேண்டும்.
.
2011 ஆம் ஆண்டு அளவுகளில் Air India ஊழியர்களுக்கு ஊதியம் செலுத்தவே முடியாமல் திண்டாடியது. அந்நிலையில் இந்திய அரசு 300 பில்லியன் ரூபாய்களை மானியமாக வழங்கி அந்த விமான சேவையை தொடர்ந்தும் செயல்பட வைத்தது. அனால் அந்த விமான சேவை இன்றுவரை இலாபகரமாகவில்லை.
.
தற்போது Air Indiaவிடம் 13% உள்ளூர் சந்தை மட்டுமே உள்ளது. புதிதாக தோன்றிய IndiGo, SpiceJet போன்ற மலிவு விலை விமான சேவைகள் பயணிகளை தம்வசம் இழுத்துள்ளன.
.
Air Indiaவை கொள்வனவு செய்வோர்க்கு சில சாதகமே உண்டு. இந்த விமான சேவைக்கு மேற்கு நாடுகள் உட்பட பல சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கும் உரிமை உண்டு. இதனிடம் அனுபவம் உள்ள ஊழியர்களும் உண்டு. அத்துடன் இந்த சேவை Star Alliance அமைப்பிலும் ஒரு அங்கமாகும்.
.
ஆனால் இந்த சேவையை கொள்வனவு செய்வோர் அதன் கடனுக்கும் பொறுப்பானவர். அத்துடன் இந்த விமான சேவையின் 25,000 உறுப்பினர்களை கொண்ட தொழிலாளர் சங்கத்தையும் சந்தோஷப்படுத்த நேரிடும்.
.
Tata நிறுவனமும் Air Indiaவை கொள்வனவு செய்யக்கூடிய நிறுவனமாக கருதப்படுகிறது. சுமார் 70 வருடங்களின் முன் Tata இந்த விமான சேவையில் உரிமை கொண்டிருந்தது. கடந்த 15 வருடங்களின் முன்னரும் Tata இவ்வாறு Air Indiaவை கொள்வனவு செய்ய முனைந்திருந்தது. ஆனால் இம்முறை Tata இதுபற்றி எந்தவித கருத்தையும் வெளியிட்டு இருக்கவில்லை.
.
Mahindra நிறுவனமும் Air Indiaவை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் உள்ளது.
.