இந்தியாவின் அரச நிறுவனமான Air India விமான சேவையை Tata Group கொள்வனவு செய்வதாக இன்று வெள்ளி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்வனவுக்கு Tata $2.4 பில்லியன் செலவிடுகிறது. 2009ம் ஆண்டு முதல் நட்டத்தில் இயங்கும் Air India சேவையிடம் தற்போது 141 விமானங்கள் உண்டு.
புதிய நிறுவனம் இந்திய அரசுக்கு 27 பில்லியன் இந்திய ரூபாய்களை வழங்கும். அத்துடன் Air India நிறுவனம் கொண்டிருக்கும் 153 பில்லியன் ரூபாய்கள் கடனையும் ஏற்றுக்கொள்ளும். மேலும் தற்போதைய Air India ஊழியர்கள் குறைந்தது 1 ஆண்டு காலத்துக்கு பதவிநீக்கம் செய்யப்படக்கூடாது.
ஆனாலும் Air India தற்போது கொண்டுள்ள மொத்த கடன் 615 பில்லியன் ரூபாய்கள். இன்றைய கொள்வனவு இணைக்கப்படி இந்திய அரசு மிகுதி கடனை அடைக்கும்.
1932ம் ஆண்டு Tata Airlines என்று ஆரம்பிக்கப்பட்ட விமான சேவையே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அரச உரிமையுடன் Air India என்று மாறி இருந்தது.
Spicejet $2 பில்லினுக்கு Air India வை கொள்வனவு செய்ய போட்டிட்டு இருந்தது.