இந்திய பிரதமர் மோதியின் பா.ஜ. கட்சியின் ஆதரவு கொண்ட இந்துவாதா குழுவான Vishwa Hindu Parishad (VHP) அக்பர் என்ற சிங்கத்தையும் சீதா என்ற சிங்கத்தையும் ஒரே கூட்டில் அடைப்பதை தடுக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது.
அக்பர் (Akbar) என்ற சிங்கம் முன்னர் பா.ஜ. கட்சி ஆட்சியில் உள்ள திரிபுர மாநில மிருக காட்சி சாலை ஒன்றில் ராம் (Ram) என்ற பெயரையே கொண்டிருந்தது.
ஆனால் அந்த சிங்கம் பின்னர் TCP ஆட்சியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்து மிருக காட்சி சாலை ஒன்றுக்கு மாற்றப்பட்ட பின்னர் அதற்கு அக்பர் என்று பெயர் இடப்பட்டது.
அந்த சிங்கத்தையே மேற்கு வங்கத்தில் உள்ள சீதாவுடன் ஒரே கூட்டில் அடைக்க வேண்டாம் என்கிறது VHP. அவ்வாறு செய்வது இந்து உணர்வை பாதிக்கிறதாம்.
முன்னர் கொழும்பு மிருக காட்சி சாலையில் இருந்த புலிகளுக்கு LTTE மீது வெறுப்பு கொண்ட சிங்கள-பெளத்தம் ஒழுங்காக உணவு போடுவது இல்லை என்று இலங்கை இந்து-தமிழ் நகைத்து இருந்தது.