மீண்டும் அமெரிக்க தளம் மீது தாக்குதல், 6 Kurdish பலி

மீண்டும் அமெரிக்க தளம் மீது தாக்குதல், 6 Kurdish பலி

சிரியாவின் கிழக்கே அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஞாயிறு இடம்பெற்ற drone தாக்குதலுக்கு அந்த தளத்தில் இருந்த அமெரிக்க ஆதரவு கொண்ட 6 Kurdish குழுவினர் பலியாகி உள்ளனர்.

அண்மையில் ஜோர்டானில் இருந்த அமெரிக்க தளம் ஒன்றின் மீது செய்யப்பட்ட தாக்குதலுக்கு 3 அமெரிக்க படையினர் பலியாகி இருந்தனர். இதனால் ஆவேசம் கொண்ட அமெரிக்கா பெருமளவு தாக்குதல்களை ஈரான் ஆதரவு கொண்ட குழுக்கள் மீது செய்தது.

ஆனாலும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. நேற்று பலியான 6 பேரும் சிரியாவில் இயங்கும் Syrian Democratic Forces என்ற அமெரிக்க ஆதரவு குழுவின் உறுப்பினர்.

அமெரிக்க படைகளை சிரியாவில் இருந்தும், ஈராக்கில் இருந்தும் வெளியேறுமாறு கேட்டு பல குழுக்கள் போராடுகின்றன.