அமெரிக்கா இந்தியாவுக்கு சுமார் $4 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விருப்பம் 2023ம் ஆண்டு பிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்தியா அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை கைக்கூலி கொலையாளி மூலம் கொலை செய்ய முனைந்தமை அறியப்பட்டவுடன் அமெரிக்க ஆயுத Senate committee விற்பனையை இடைநிறுத்தி இருந்தது.
ஆனாலும் அமெரிக்காவின் சீனாவுடனான போட்டிக்கு இந்தியா அவசியம் என்பது விற்பனையை முன்னெடுக்க காரணமாகிறது.
விற்பனை செய்யப்படும் பொருட்களில் பின்வருவனவும் அடங்கும்:
1) மொத்தம் 31 MQ-9B SkyGuardian வகை ஆளில்லா வேவு மற்றும் தாக்குதல் விமானங்கள்.
2) மொத்தம் 170 AGM-114R Hellfire ஏவுகணைகள்.
3) மொத்தம் 310 லேசர் குண்டுகள்.
4) தொலைத்தொடர்பு மற்றும் வேவு செய்யும் உபகரணங்கள்.