தனது பேரனை வலது கையால் பிடித்துக்கொண்டு காசா யுத்தத்தை நீங்கி தப்ப முனைந்த பாட்டியை இஸ்ரேல் இராணுவம் சுட்டு கொலை செய்துள்ளது. பேரனின் வலது கையில் வெள்ளை கொடி ஒன்று இருந்தும் இஸ்ரேல் பாட்டியை படுகொலை செய்துள்ளது.
Hala Khreis என்ற பாட்டியும், வயது 57, பேரனும் உட்பட சிறு தொகை பாலஸ்தீனர் சண்டை இடம்பெறும் பகுதி ஒன்றை விட்டு நீங்க முயன்றுள்ளனர். பாட்டியும், பேரனும் முன் சென்றுள்ளனர்.
இவர்கள் al-Rimal என்ற இடத்தில் சந்தி ஒன்றை வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கடக்கையிலேயே பாட்டி சுடப்பட்டார்.
அந்த சந்திக்கு மேற்கே சுமார் 200 மீட்டர் தூரத்தில் இஸ்ரேலின் கவச வாகனங்கள் இருந்தமை செய்மதி படங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. தெற்கேயும் இஸ்ரேலிய படைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
வெள்ளை கொடியுடன் சென்ற பலர் இஸ்ரேலிய படையினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு தடவை விடுவிக்கப்பட்டு வெள்ளை கொடியுடன் வந்த 3 யூதர்களையும் இஸ்ரேல் சுட்டு கொலை செய்திருந்தது.