தாய்வானில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஆளும் DPP கட்சியின் உறுப்பினர் William Lai Chingte மீண்டும் சனாதிபதியாக வென்றுள்ளார்.
சீனாவுடன் முரண்படும் இந்த கட்சி அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டது. Lai தற்போது உதவி சனாதிபதி ஆவார்.
எதிர் கட்சியான KMT தமது தோல்விக்கு புதிதாக போட்டியிட்ட TPP கட்சியை குற்றம் சாட்டியுள்ளது. TPP வேட்பாளர் பெருமளவு வாக்குகளை பிரித்து எடுத்துள்ளது.
இதனால் மேலும் 4 ஆண்டுகளுக்கு சீன-தாய்வான் முறுகல் நிலை தொடரும்.