இலங்கையின் தெற்கே உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota International Port) கடந்த 2023ம் ஆண்டில் 26% வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த துறைமுகம் 99 ஆண்டுகள் குத்தகை மூலம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குறிப்பாக கார், பஸ் போன்ற Ro/Ro (Roll-on/roll-off) வகை பொருட்களையே இந்த துறைமுகம் அதிகம் கையாளுகிறது.
இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் 700,000 அலகுகளை கையாண்டு உள்ளது. தென் கொரியாவின் Ulsan துறைமுகத்துக்கு சென்ற வாகனங்களை காவும் MV Hae Shin என்ற கப்பல் 3,626 அலகுகளை பரிமாறிய வேளையிலேயே 700,000 எண்ணிக்கையை இந்த துறைமுகம் அடைந்துள்ளது.
ஜப்பானின் கப்பல்களும் இந்த துறைமுகத்தை விரும்பி பயன்படுத்த ஆரம்பித்து உள்ளன என்று கூறப்படுகிறது.
இந்த துறைமுகம் வழங்கும் தரமான சேவைகளை விரைவாக வழங்குவதே இதனூடாக வர்த்தகம் அதிகரிக்க காரணம்.
அத்துடன் காசா யுத்தம் காரணமாக அண்மையில் செங்கடல் மூலமான கப்பல் போக்குவரத்துக்கு தடைப்பட்டமையும் அம்பாந்தோட்டை மூலமான வர்த்தகத்தை அதிகரித்து உள்ளது.