ஜப்பானில் 7.6 அளவு நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.6 அளவு நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று திங்கள் இடம்பெற்ற 7.6 அளவிலான நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முதல் நடுக்கம் பிற்பகல் 4:10 மணிக்கு Anamisu பகுதியில் இருந்து சுமார் 42 km தூரத்தில், 10 km ஆழத்தில் இடம்பெற்றது என்கிறது அமெரிக்காவின் USGS.

Ishikawa, Niigata, Toyama ஆகிய பகுதிகள் பாதிப்புக்கு உட்படலாம். Noto என்ற மேற்கு கரையோர பகுதி மக்களை உடனடியாக மேட்டு நிலங்களுக்கு செலவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடுக்கம் சுமார் 5 மீட்டர் உயர அலைகளை தோற்றுவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் நடுக்கத்தை அடுத்து பல 6.2, 5.2 அளவிலான பின் நடுக்கங்களும் இடம்பெற்று உள்ளன.

சுமார் 0.3 மீட்டர் உயர சுனாமி அலைகள் தென் கொரியாவின் கிழக்கு கரைகளை அடையலாம் என்று தென் கொரியா கூறியுள்ளது.