கதிர்காம கந்தனுக்கு பக்தர் ஒருவர் வழங்கிய 38 இறாத்தல் எடை கொண்ட தங்க தட்டு ஒன்று காணாமல் போயுள்ள காரணத்தால் தலைமை பூசாரியான (Kapuwa) Somipala Ratnayake கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனாலும் காணிக்கையாக வழங்கப்படும் பொருட்கள் பூசாரிக்கே உரியவை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் சுமார் 6.4 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மேற்படி தங்க தட்டை கந்தனுக்கு காணிக்கை செய்தது Angoda Lokka என்ற போதை விற்பனையாளரின் மனைவி என்றும் கூறப்படுகிறது.
கதிர்காமத்தில் 10 கப்புவாக்கள் உள்ளனர். இவர்கள் ஆளுக்கொரு மாதமாக பூசை செய்வர். ஒவ்வொரு பூசாரியிடமும் சுமார் 20 முதல் 30 உதவியாளரும் உள்ளனர்.
மிகுதி இரண்டு மாதங்களும் Basnayaka Nilame களால் பூசைகள் செய்யப்படும்.