iPhone என்ற தொலைபேசியை தயாரிக்கும் அமெரிக்காவின் Apple நிறுவனம் தனது தொழில்நுட்பம் நிறைந்த சில கடிகாரங்களை அமெரிக்காவுள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது.
Masimo என்ற நிறுவனத்தின் குருதியில் உள்ள oxygen அளவை கணிப்பிடும் நுட்பத்தை Apple சட்டத்துக்கு முரணாக (patent-infringing) பயன்படுத்தி உள்ளது என்று International Trade Commission தீர்ப்பு கூறியமையே இந்த தடைக்கு காரணம்.
Apple கடிகாரங்கள் Pulse Oximeter என்ற பெயரில் இந்த நுட்பத்தை 2020ம் ஆண்டு (Series 6) முதல் உள்ளடக்கி வந்துள்ளன.
தடையால் இந்த மாதம் வெளிவரும் Ultra 2 (அல்லது Series 9) வகை கடிகாரத்தை அமெரிக்காவில் கொள்வனவு செய்ய முடியாது. தடை டிசம்பர் 26ம் திகதி நடைமுறைக்கு வந்துள்ளது.