தற்போதும் பெருமளவு மக்களின் ஆதரவை கொண்ட முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்க அரசியலில் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அமெரிக்காவில் ஆளும் கட்சிகள் நீதிபதிகளை தெரிவு நியமனம் செய்வதும் குட்டையை மேலும் குழப்புகிறது.
அமெரிக்காவில் தற்போது 2024ம் ஆண்டுக்கான சனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. முதலில் மாநில அளவில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் மூலம் (primary தேர்தல்) தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்து ஒரு தொகை வாக்குகளை வழங்கும். தேசிய அளவில் அதிக வாக்குகள் பெறுபவர் இறுதி தேர்தலில் போட்டியிடுவர்.
ரம்ப் 2024ம் ஆண்டு மீண்டும் சனாதிபதி ஆக வெற்றி பெறலாம் என்ற பயத்தில் அவர் வேட்பாளர் ஆவதை தடுக்க முனைகிறது பைடெனின் Democratic கட்சி. அதற்கு 14th Amendment இன் Section 3 பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் insurrection அல்லது rebellion செய்தோர் சனாதிபதி ஆக முடியாது என்கிறது.
இந்த முயற்சிக்கு Democratic கட்சி நாடியது Colorado மாநில Supreme Court. இந்த நீதிமன்றில் உள்ள நீதிபதிகள் அனைவரும் Democratic கட்சியால் நியமனம் செய்யப்பட்டவர்கள். இந்த நீதிமன்றம் செவாய்க்கிழமை ரம்ப் 2024இல் போட்டியிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
ரம்ப் தரப்பு இந்த தீர்ப்பை மாற்றி அமைக்க அமெரிக்காவின் தேசிய அளவிலான US Supreme Court இல் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. அமெரிக்க Supreme Court விசாரணைக்கு இணங்கினால் Colorado தீர்ப்பு இடைநிறுத்தம் செய்யப்படும், ரம்ப் தொடர்ந்தும் primary தேர்தலில் போட்டியிடுவர்.
US Supreme Court இல் பெரும்பாண்மை நீதிபதிகள் Republican கட்சியால் நியமனம் செய்யப்பட்டவர்கள். மொத்தம் US Supreme Court இன் 9 நீதிபதிகளில் 3 பேர் ரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள்.
மக்கள் தீர்ப்பா அல்லது நீதிபதிகள் தீர்ப்பா மகேசன் தீர்ப்பு என்ற குழப்பத்தில் உள்ளது அமெரிக்கா. இந்த குழப்பம் அடுத்த சனாதிபதி தேர்தலின் பின்னும் தொடரலாம்.