தமது நாட்டை ஆக்கிரமித்து உள்ள ரஷ்யாவுடன் போரிட மேலும் 500,000 படையினர் தேவை என்கிறார் யுகின்றேன் சனாதிபதி செலன்ஸ்கி.
ஏற்கனவே அமெரிக்காவின் $60 பில்லியன் உதவியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் $55 பில்லியன் உதவியும் தடைப்பட்டு உள்ள நிலையிலேயே செலன்ஸ்கி மேலும் 500,000 தேவை என்கிறார்.
மேலதிக 500,000 படையினருக்கு பயிற்சி வழங்கி, தேவையான ஆயுதங்கள் வழங்க மேலும் பெருமளவு பணமும், பல மாதங்களும் தேவை.
யுகின்றேன் யுத்தம் ஏற்கவே 2 ஆண்டுகளை கடந்துள்ளது. யுகின்றேன் சனாதிபதியின் கணிப்பீடு இந்த யுத்தம் மேலும் பல ஆண்டுகள் தொடரும் என்பதை காட்டுகிறது.
ரஷ்யா தரப்பில் 617,000 படையினர் யுகிரேனில் போராடுவதாக புட்டின் கூறியுள்ளார்.