இந்தியாவில் இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் (MPs) பாராளுமன்றத்தில் இருந்து ஆளும் பா.ஜ. கட்சியால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த கிழமை இருவர் இந்திய பாராளுமன்ற பார்வையாளர் பகுதியில் இருந்து அங்கத்தவர் சபை உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இந்த செயலை பாராளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டும் என்று கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களே இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
திங்கள் கிழமை மட்டும் 78 எதிர்க்கட்சி உறுப்பினர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த தடை வெள்ளிக்கிழமை இந்த தவணை முடியும் வரை நடைமுறையில் இருக்கும்.
இதுவரை 6 பேர் மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளனர் என்கிறது போலீஸ்.