காசா குற்றங்களில் இருந்து நழுவும் மேற்கின் தலைவர்கள்

காசா குற்றங்களில் இருந்து நழுவும் மேற்கின் தலைவர்கள்

அமெரிக்க சனாதிபதி பைடென் முதலில் காசாவில் பலியாகும் பொதுமக்களின் தொகை அளவுக்கு அதிகமானது என்று கடந்த சில தினங்களாக கூறி வந்தார்.

அதன்பின் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும், ஜெர்மனியும் கூட்டாக காசாவில் பலியாகும் பொதுமக்களின் தொகை அளவுக்கு அதிகம் என்றும் அங்கு உடனடியாக யுத்தநிறுத்தம் வேண்டும் என்று கூறினார்.

பின்னர் பிரான்சும் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

இன்று பிரித்தானியாவின் பிரதமர் Rishi Sunak க்கும் காசாவில் “அளவுக்கு அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளனர்” என்று அழ ஆரம்பித்துள்ளார்.

இதுவரை இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்க உரிமை உண்டு என்று கூறிவந்த இவர்கள் இஸ்ரேலின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்திருக்கவில்லை. தற்போது தம்மை அந்த குற்றங்களில் இருந்து பாதுகாக்க முனைகின்றனர்.

யுக்கிரேனை ரஷ்யா ஆக்கிரமித்த பின் கிளர்ந்து எழுந்த இந்த நாடுகள் இஸ்ரேல் கடந்த 70 ஆண்டுகளாக பலஸ்தீனர் நிலங்களை ஆக்கிரமிப்பதை வளர்த்து வந்துள்ளனர்.

காசா யுத்தத்தில் இதுவரை சுமார் 19,000 பலஸ்தீனர் பலியாகி உள்ளனர். இதில் எத்தனைபேர் ஹமாஸ் உறுப்பினர் என்று இஸ்ரேலுக்கு தெரியாது. அதேவேளை இஸ்ரேலிய படைகளின் இழப்புகளும் மெல்ல அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. இன்றும் விசேட படையினர் உட்பட 5 இஸ்ரேலிய படையினர் பலியாகி உள்ளனர்.