முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அடுத்த ஆண்டு மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம் என்ற பயம் கொண்ட அமெரிக்க காங்கிரஸ் அவரிடம் இருந்து NATO அணியை பாதுகாக்க சட்டம் ஒன்றை நடைமுறை செய்கிறது.
அண்மையில் அமெரிக்கா சட்டமாக்கிய $886 பில்லியன் பெறுமதியான National Defense Authorization Act அதனுள் ரம்பிடம் இருந்து, ஆனால் அவரின் பெயரை குறிப்பிடாது, NATO வை பாதுகாக்கும் சட்டத்தையும் கொண்டுள்ளது.
இந்த சட்டப்படி காங்கிரசின் அனுமதி இன்றி அல்லது 2/3 Senate ஆதரவு இன்றி அமெரிக்க சனாதிபதி NATO அணியில் இருந்து அமெரிக்காவை தன்னிசையாக விலக்க முடியாது.
ரம்ப் தனது முதல் ஆட்சியில் NATO அணி மீது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, NATO வுக்கு பாதகமாக இயங்கி இருந்தார். குறிப்பாக NATO அணியில் உள்ள ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் மீது இவர் காழ்ப்பு கொண்டிருந்தார்.
இந்த சட்டம் உயர் நீதிமன்றம் சென்றாலும் நீதிமன்ற தீர்வுக்கு பல காலம் செல்லும்.