தனது படைகளை மாலைதீவிருந்து பின்வாங்குகிறது இந்தியா

தனது படைகளை மாலைதீவிருந்து பின்வாங்குகிறது இந்தியா

மாலைதீவில் இருந்து தனது படைகளை பின்வாங்க இந்தியா இணங்கி உள்ளது என்று மாலைதீவின் சனாதிபதி Mohamed Muizzu இன்று ஞாயிறு கூறியுள்ளார்.

COP28 மாநாட்டின் அமர்வுக்கு சென்ற Muizzu அங்கு வந்திருந்த இந்திய பிரதமர் மோதியுடன் உரையாடிய பின்னரே மேற்படி தீர்மானத்தை பகிரங்கம் செய்துள்ளார். ஆனால் மோதி இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவித்து இருக்கவில்லை.

மாலைதீவில் நிலை கொண்டுள்ளது சுமார் 77 இந்திய இராணுவம் மட்டுமே என்றாலும், அவை வெளியேற இருப்பது மாலைதீவில் இந்தியாவின் ஆளுமை நீங்கி மீண்டும் சீன ஆளுமை தொடர வழி செய்யும்.

இந்தியாவால் மாலைதீவில் செய்யப்படும் கட்டுமான வேலைகளும் மீள் பரிசீலனை செய்யப்பட உள்ளன.

Muizzu சீன ஆதரவு கொண்டவராக இருக்கையில், முன்னைய சனாதிபதி Ibrahim Mohamed இந்திய ஆதரவு கொண்டவராக இருந்தார். Ibrahim செப்டம்பர் மாதம் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.