உலக அளவில் வாழ்க்கை செலவு மிக அதிகமான நகராக சிங்கப்பூராக மீண்டும் அறியப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 9 தடவைகள் சிங்கப்பூர் வாழ்க்கை செலவில் முதலாம் இடத்தில் இருந்துள்ளது.
மேற்படி ஆய்வை Economist Intelligence Unit (EIU) என்ற ஆய்வு அமைப்பு 173 நாடுகளில் உள்ள நகரங்களை உள்ளடக்கி செய்து உள்ளது.
இந்த ஆண்டு சிங்கப்பூர் சுவிஸ் நாட்டின் சூரிச் நகருடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரம் 3ம் இடத்தில் உள்ளது.
ஹாங்காங் கடந்த ஆண்டிலும் ஒரு படி கீழே சென்று 5ஆவது அதிக வாழ்க்கை செலவை கொண்ட நகரம் ஆகிறது.
ஜெனீவா, பரிஸ், Copenhagen, Los Angeles, Tel Aviv ஆகிய நகரங்களும் முதல் 10 அதிக வாழ்க்கை செலவு கொண்ட நகரங்களில் அடங்குகின்றன.