அமெரிக்க சீக்கியர் கொலைக்கு இந்தியா $100,000

அமெரிக்க சீக்கியர் கொலைக்கு இந்தியா $100,000

அமெரிக்க-கனேடிய இரட்டை குடியுரிமை கொண்ட சீக்கியரான Gurpatwant Singh Pannun என்பவரை படுகொலை செய்ய Nikhil Gupta என்ற இந்திய அதிகாரி $100,000 கூலிப்பணம் வழங்க முன் வந்தமை நியூ யார்க் நீதிமன்ற வழக்கில் ஆதாரமாக பதியப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரியான Nikhil Gupta, வயது 52, விடம் இருந்து பணம் பெற்று கூலி கொலையை செய்ய முன்வந்தவர் ஒரு அமெரிக்க undercover FBI போலீஸ் அதிகாரி என்பது Gupta வுக்கு தெரியாது.

Nikhil Gupta தற்போது Czech Republic என்ற நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஆவண செய்யப்படுகின்றன.

ஜூன் 9ம் திகதி Gupta இடைத்தரகர் ஒருவர் மூலம் கொலைக்கு முற்பணமாக $15,000 செலுத்தி இருந்தார். இதை FBI படம்பிடித்து உள்ளது. அப்படம் வழக்கில் ஆதாரமாக உள்ளது.

இந்த உண்மையை அறிந்தவுடன் William Burns என்ற அமெரிக்க சிஐஏ (CIA) director உம், Avril Haines என்ற National Intelligence director உம் இந்தியா சென்று அமெரிக்காவின் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

சீன இராணுவத்துக்கு முகம் கொடுக்க இந்தியா அமெரிக்காவுக்கு தேவை. சீனாவுக்கு முகம் கொடுக்கவும், பொருளாதார நன்மைகளை அடையவும் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவை. அதனால் மேற்படி படுகொலை முயற்சி வழக்கு விரைவில் மறக்கப்படாலம்.

Photo: US Department of Justice