நெதர்லாந்தில் கடும்போக்கு கொள்கை கொண்ட Geert Wilders தலைமையிலான கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இந்த கட்சி 37 ஆசனங்களை வெல்கிறது.
இரண்டாம் நிலையில் உள்ள கூட்டணி 25 ஆசனங்களையும், தற்போதைய பிரதமரின் கூட்டணி 20 ஆசனங்களையும் பெறுகின்றன.
Geert Wilders ஒரு அகதிகள் எதிர்ப்பு, குடிவரவாளர் எதிர்ப்பு கொள்கைகளை கொண்டவர். இவர் “நெதர்லாந்து மீண்டும் Dutch மக்களிடம் கையளிக்கப்படும்” என்றும் “சுனாமி போல் வரும் அகதிகள்” தடுக்கப்படுவர் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் இவர் நெதர்லாந்து யுக்கிரேனுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கூறுபவர். இந்த கொள்கை ஐரோப்பிய ஒன்றியத்துள் பெரும் குழப்பத்தை உருவாக்கும்.
இவரை நெதர்லாந்தின் ரம்ப் என்றே சிலர் அழைப்பர்.