AI ஐ பெரும் குழப்பத்துள் அமுக்கிய HI

AI ஐ பெரும் குழப்பத்துள் அமுக்கிய HI

Artificial Intelligence (AI) விரைவில் மனிதனை வென்றுவிடும் என்று கதைகள், கட்டுரைகள் நம்ப வைக்கும் இந்த காலத்தில் ChatGPT என்ற முன்னனி AI நிறுவனத்துள் ஏற்பட்டுள்ள குழப்பம் Human Intelligence (HI) மிகவும் பொல்லாதது, ஆபத்தானது, வஞ்சகம் நிறைந்தது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

OpenAI யை உருவாக்கும் ChatGPT என்ற நிறுவனத்தின் CEO பதவியில் இருந்த Sam Altman என்பவரை ChatGPT நிறுவனத்தின் Board of Directors அண்மையில் பதவி நீக்கி இருந்தனர். அவர்களுக்கு சட்டப்படி அந்த உரிமை உண்டு.

பதவி நீக்கப்பட்ட ChatGPT CEO வை உடனே போட்டி நிறுவனமான Microsoft உள்வாங்கியது.

தமது CEO விரட்டப்பட்டதால் வெறுப்பு அடைந்த சுமார் 505 ChatGPT ஊழியர்கள் தாம் ChatGPT நிறுவனத்தை விட்டு நீங்கப்போவதாக தற்போது மிரட்டுகின்றனர். தேவைப்பட்டால் தாம் Microsoft இல் இணையவும் தயார் என்றுள்ளனர்.

ChatGPT board உறுப்பினர்கள் அனைவரையும் பதவி விலகும்படி இந்த ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

ஊழியர்களின் மிரட்டலுக்கு ChatGPT board என்ன செய்யும் என்பது இதுவரை அறியப்படவில்லை.

HI ஐ AI என்றும் வெல்லாது.