WHO: காசா al-Shifa வைத்தியசாலை ஒரு dead zone

WHO: காசா al-Shifa வைத்தியசாலை ஒரு dead zone

வடக்கு காசாவில் உள்ள காசாவின் மிக பெரிய al-Shifa வைத்தியசாலை ஒரு dead zone என்று The World Health Organization (WHO) இன்று கூறியுள்ளது.

இஸ்ரேல் இந்த வைத்தியசாலைக்கு கீழ் ஹமாஸ் நிலக்கீழ் சுரங்கங்கள் பல கொண்ட தனது கட்டளை தலைமையகத்தை கொண்டுள்ளது முன்னர் திடமாக கூறி அந்த வைத்தியசாலையை ஆக்ரமித்து தேடுதல் செய்தது.

ஆனால் தற்போது ஹாமாஸின் தலைமையகம் இருந்ததற்கான ஆதாரம் எதையும் முன்வைக்காத இஸ்ரேல் படைகள் அந்த வைத்தியசாலையை விட்டு அனைவரையும் வெளியேற கூறியுள்ளது.

WHO வின் வைத்தியர் Ramez Radwan இஸ்ரேல் தம்மை வெளியேற பணித்தது என்று கூறினாலும், இஸ்ரேல் தாம் அப்படி கூறவில்லை என்று நோயாளிகள் வெளியேறிய நிலையில் தற்போது கூறுகிறது.

அதேவேளை இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு Jabalia என்ற இடத்தில் இன்று மேலும் 80 பேர் பலியாகி உள்ளனர்.

காசா மக்களை தெற்கே நகர இஸ்ரேல் அறிவித்தாலும், தெற்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசி மக்களை அழிகிறது. காசா மக்களை எகிப்துள் தள்ளிவிடும் நோக்கம் இஸ்ரேலுக்கு இருக்கலாம்.