ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய SAS பிரிவு விசேட படைகள் செய்த படுகொலைகளை மறைத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜெனரல் Gwyn Jenkins என்று தற்போது அறியப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு ஆப்கானித்தானில் பிரித்தானிய SAS படைகள் கை விலங்குடன் இருந்த ஆப்கானிஸ்தான் ஆண்களையும் சுட்டு கொன்றுள்ளன. அத்துடன் போராடும் வயதுடைய ஆண்கள் அனைவரையும் சுடலாம் என்ற கொள்கையையும் SAS கொண்டிருந்தது. அந்த கொள்கையின்படி 15 வயதுக்கு மேலான ஆண்கள் அனைவ்ரும் போராடும் வயதுடையோர்.
பிரித்தானிய இராணுவ சட்டப்படி இராணுவம் செய்யும் குற்றங்கள் இராணுவ போலீசாருக்கு (military police) அறிவிக்கப்படல் அவசியம். ஆனால் Jenkins அவ்வாறு செய்யாது சம்பந்தப்பட்ட ஆவணங்களை classified என்ற வகைக்குள் அடக்கி ஒளித்து வைத்துள்ளார்.
இவ்வாறு குற்றங்களை மூடி மறைத்த காலத்தில் Jenkins ஓர் கேணல் மட்டுமே. இவர் வேகமாக பதவி உயர்வுகளை பெற்று தற்போது ஜெனரல் பதவியை அடைந்துள்ளார். அவரின் கீழ் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளாக கணக்கிடப்பட்டு உள்ளனர்.
இந்த செய்தி முன்னர் வெளிவந்திருந்தாலும் அந்த அதிகாரி ஜெனரல் Jenkins என்பது தற்போது அறியப்பட்டுள்ளது.
ஒரு SAS squadron மட்டும் 6 மாத கால இடைவெளியில் 54 அப்பாவி ஆப்கானிஸ்த்தாரை படுகொலை செய்திருந்தது என்று Panorama நிகழ்ச்சி கூறியுள்ளது.