காசா மக்களை நாடு கடத்த இஸ்ரேல் முனைவு

காசா மக்களை நாடு கடத்த இஸ்ரேல் முனைவு

காசாவில் வாழும் அனைத்து பலஸ்தீனர்களையும் வேறு நாடுகளுக்கு கடத்த இஸ்ரேல் முனைகிறது. 

இஸ்ரேலின் ஐ.நா.வுக்கான முன்னாள் தூதுவரான Danny Danon என்பவரும், Ram Ben-Barak என்ற இஸ்ரேலின் மொசாட் உளவு படையின் முன்னாள் deputy director உம் இணைந்து அமெரிக்காவின் The Wall Street Journal பத்திரிகைக்கு திங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தற்போது Bezalel Smotrich என்ற இஸ்ரேலின் நிதி அமைச்சரும் ஆதரித்து உள்ளார். நிதி அமைச்சர் இந்த திட்டத்தை “right humanitarian solution” என்றுள்ளார்.

பலஸ்தீனர் இந்த திட்டத்தை ethnic cleansing என்றுள்ளனர்.

ஆரம்பத்தில் காசா அகதிகளை எகிப்து அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டிருந்தாலும், எகிப்து அதற்கு இணங்க மறுத்திருந்தது. இஸ்ரேலின் கள்ள நோக்கம் காசா பலஸ்தீனரை நிரந்தரமாக எகிப்துள் செலுத்துவது என்பதை எகிப்து உணர்ந்திருந்தது.

இஸ்ரேல் காசா பலஸ்தீனரை தற்போது தெற்கு நோக்கி எகிப்து எல்லை வரை தள்ளுவதும் இந்த நோக்கை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்.

1948ம் ஆண்டு வேறு இடங்களில் இருந்து இஸ்ரேலால் தள்ளப்பட்டவர்களின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளுமே இன்றைய காசா மக்கள்.

ஏன் காசா பலஸ்தீனரை வேறு நாடுகளுக்கு பதிலாக அவர்களின் West Bank பகுதிக்கு நகர்த்த இஸ்ரேல் முனையவில்லை? West Bank பலஸ்தீனரையும் நாடு கடத்தும் திட்டமோ?

https://www.wsj.com/articles/the-west-should-welcome-gaza-refugees-asylum-seekers-hamas-terrorism-displacement-5d2b5890