இறுதி நேரத்தில் அமெரிக்க சனாதிபதி பைடெனும், சீன சனாதிபதி சீயும் San Francisco நகரில் வரும் புதன்கிழமை சந்திக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல் San Francisco நகரில் இடம்பெறவுள்ள Asia-Pacific Economic Cooperation (APEC) மாநாட்டுக்கு வரும் சீயுடன் பைடென் உரையாடுவர்.
சீ செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை APEC அமர்வுகளில் பங்கு கொள்வார். பைடெனும் அங்கு செல்வார். ஆனால் இருவரும் சந்திக்கும் இடம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த சந்திப்பில் பாரிய தீர்மானங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்றாலும், இருவரும் நேரடியாக சந்திப்பது சிறிது முன்னேற்றமாக கருதப்படுகிறது.
அமெரிக்காவும், சீனாவும் பல விசயங்களில் முரண்படுகின்றன. சீனாவின் இராணுவ, பொருளாதார வளர்ச்சியை முடிந்தவரை தடுக்க அமெரிக்கா முயல்கிறது. ஆனாலும் இரு தரப்புக்கும் மறு தரப்பு அவசியமானது.
நான்சி பெலோஷி தாய்வான் சென்றபின் சீனா அமெரிக்க இராணுவத்துடன் கொண்டிருந்த தொடர்பை துடித்தது. அந்த தொடர்பை அமெரிக்கா மீண்டும் தொடர விரும்புகிறது.