அமெரிக்கா கொழும்பு துறைமுகத்துக்கு $553 மில்லியன்

அமெரிக்கா கொழும்பு துறைமுகத்துக்கு $553 மில்லியன்

அமெரிக்கா கொழும்பு மேற்கு துறைமுக (West Terminal) கட்டுமானத்துக்கு $553 மில்லியன் கடன் வழங்க முன்வந்துள்ளது. இந்த கடன் அமெரிக்காவின் Development Finance Corp. (DFC) மூலம் வழங்கப்படும்.

இந்த கடன் இலங்கை அரசுக்கு வழங்கப்படுவது அல்ல, பதிலுக்கு அதானி தலைமையிலான கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்படுவது.

கொழும்பு துறைமுகத்தின் West Terminal உரிமை கோத்தபாய அரசால் கேள்விகள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவின் அதானிக்கு வழங்கப்பட்டு இருந்தது. 

West Terminal திட்டத்தில் அதானிக்கு 51% உரிமையும், இலங்கையின் John Keells Holding நிறுவனத்துக்கு 34% உரிமையும், இலங்கை Port Authority க்கு மிகுதி 15% உரிமையும் உண்டு.

East Terminal உரிமை சீனாவிடம் உள்ளது.

இவற்றுக்கு அருகில் கடலை நிரப்பி உருவாக்கப்பட்ட 269 hectares பரப்பு கொண்ட Colombo Port City அபிவிருத்தி சீனாவின் கையில் உள்ளது.