சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அஸ்ரேலிய பிரதமர் Anthony Albanese சீன சனாதிபதி சீயை பெய்ஜிங்கில் சந்திக்கிறார். 2016ம் ஆண்டுக்கு பின் அஸ்ரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் உறவு நெருக்கமாகி உள்ளது.
அஸ்ரேலியாவின் பொருட்கள் மீது சீனா நடைமுறை செய்த மேலதிக இறக்குமதி வரிகளை நீக்குவதே அஸ்ரேலிய பிரதமரின் முதல் நோக்கம். பதிலுக்கு சீயும் சீன நிறுவனங்கள் அஸ்ரேலியாவில் தமது முதலீடுகளை அதிகரிக்க வழி செய்ய பிரதமரை கேட்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்ப் காலத்தில் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப Scott Morrison என்ற அக்கால பிரதமரின் ஆட்சியில் அஸ்ரேலியா சீனாவுடன் மோதியது. அந்த நிலை பின் வந்த பைடென் காலத்திலும் தொடர்ந்தது. இதற்கு பதிலடியாக சீனா நடைமுறை செய்த அஸ்ரேலிய பொருட்கள் மீதான மேலதிக இறக்குமதி வரிகள் அஸ்ரேலியாவை பலமாக பாதிக்க ஆரம்பித்தன.
அஸ்ரேலிய பொருளாதாரம் மந்தம் அடைய கடந்த ஆண்டு Morrison (Liberal Party) ஆட்சி கவிழ்ந்து Albanese (Labor Party) ஆட்சி தோன்றியிருந்தது.
அஸ்ரேலியாவின் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் சந்தை இல்லை. அஸ்ரேலியாவுக்கு சீன சந்தை மிக அவசியமானது. உதாரணமாக அஸ்ரேலியா ஆண்டுதோறும் சுமார் $1.2 billion ($1,200 மில்லியன்) பெறுமதியான wine ஐ சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. சீனாவின் மேலதிக வரிகளின் பின் அத்தொகை $8 மில்லியன் ஆக குறைந்திருந்தது.