அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அடங்கிய மேற்கு யுக்கிரேனை மெல்ல கைவிடுவதாக விசனம் கொண்டுள்ளார் யுகின்ரேன் சனாதிபதி சேலன்ஸ்கி.
மேற்கின் தூண்டுதல் காரணமாக ரஷ்யாவுடன் மோதிய சேலன்ஸ்கி தற்போது உண்மையை உணர்ந்து கவலை கொள்வது வியப்புக்குரியது அல்ல. இதை எதிர்பாராது தனது நாட்டை பெரும் அழிவுக்குள் தள்ளியது அவரின் மடமை.
TIME வெளியீட்டுக்கு வழங்கிய நேர்முகம் ஒன்றில் யுக்கிரேன் ரஷ்யாவுடனான யுத்தத்தில் வெற்றி அடையும் என்று மேற்கு நம்பவில்லை என்று சேலன்ஸ்கி கவலை கொண்டுள்ளார். தனது கூற்றில் அவர் “Nobody believes in our victory like I do” என்றுள்ளார்.
யுக்கிறேன் யுத்தம் மீதான சலிப்பு பெரும் அலை போல பெருகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் யுக்கிறேன் யுத்தத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறது.
சேலன்ஸ்கி “Exhaustion with the war rolls along like a wave. You see it in the United States, in Europe” என்றும் கூறியுள்ளார்.
பைடென் யுக்கிறேனுக்கு மேலும் $61.4 பில்லியன் உதவி வழங்க காங்கிரசை கடந்த கிழமை கேட்டு இருந்தாலும், காங்கிரஸ் அதை நிராகரித்து உள்ளது. அதனால் பைடென் உதவி வழங்க முடியாது.
சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் போர் மூண்டாலும் இந்நிலை தோன்றலாம், மேற்கு அந்த யுத்தத்தையும் இடையில் கைவிடலாம்.