இஸ்ரேலை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி பைடென் காஸாவில் மரணித்தோர் தொகையை குறைத்து மதிப்பிட காஸா சுகாதார அமைச்சு அங்கு மரணித்தோர் பட்டியலை விபரமாக வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை பைடேன் காஸாவில் இஸ்ரேலின் குண்டுகளுக்கு பலியானோர் தொகை என்று காஸா சுகாதார அமைச்சு வெளியிடும் தொகையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக (no confidence) கூறியிருந்தார்.
மறுநாள் வியாழன் வெள்ளைமாளிகை பேச்சாளர் John Kirby யும் காஸா சுகாதார அமைச்சு ஹமாஸின் அங்கம் என்று கூறியிருந்தார்.
தமது தரவை உறுதிப்படுத்தும் நோக்கில் காஸா சுகாதார அமைச்சு தற்போது அங்கு இஸ்ரேலின் குண்டுகளுக்கு பலியான 7,028 பேரில் 6,747 பேரின் பெயர், வயது, ஆண்/பெண் விபரம், அடையாள அட்டை விபரம் ஆகியவற்றை பகிரங்கம் செய்துள்ளது.
அந்த பட்டியலில் 2,913 பேர் சிறுவர்கள் என்றும், 281 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காஸா பொதுமக்கள் மரணங்கள் war crime வகைப்படுமா என்பதை விசாரிக்க வேண்டும் என்று Amnestry International கூறியுள்ளது.
மேலும் பலர் தற்போதும் இடிபாடுகளுள் அகப்பட்டு இருக்கலாம்.