சுமார் 2 மாதங்களுக்கு முன் ஜெனரல் Li Shangfu என்ற சீன பாதுகாப்பு அமைச்சர் சிங்கப்பூரில் நடைபெற்ற அமர்வு ஒன்றில் பங்கு கொண்டிருந்தார். ஆகஸ்ட் 29ம் திகதி பெய்ஜிங்கில் இடம்பெற்ற இன்னோர் அமர்வுக்கு பின்னர் அவர் முற்றாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவரை பதவியில் இருந்து விலக்கி உள்ளதாக சீனா இன்று செவ்வாய் கூறியுள்ளது.
சீனாவின் Central Military Commission என்ற அரச குழுவில் இருந்தும் Li நீக்கப்பட்டு உள்ளார்.
ஜெனரல் Li சீனாவின் இராணுவத்தை உயர் தரத்துக்கு உயர்த்தியவர். ஊழலுக்கு குற்றச்சாட்டுக்கு முன் Li சனாதிபதி சீயின் நன் மதிப்பைபெற்று இருந்தார். அதனாலேயே 2018ம் ஆண்டு அமெரிக்கா தடை செய்திருந்த Li யை இந்த ஆண்டு மார்ச் மாதம் சனாதிபதி சீ பாதுகாப்பு அமைச்சர் ஆக்கினார்.
சீன சனாதிபதி சீயின் ஆட்சியில் ஊழல் செய்வோர் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். மிக உயர் பதவிகளில் உள்ளோரும் ஊழல் செய்தால் கடுமையான தண்டனை பெறுகின்றனர்.
ஜூலை மாதம் சீனாவின் வெளியுறவு அமைச்சர் Qin Gang பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
அதே மாதம் மாதம் மேலும் இரண்டு சீன Rocket Force உயர் அதிகாரிகள் ஊழல் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். சீனாவின் Rocket Force சீயால் 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.