மேற்கில் இஸ்ரேல் ஆதரவு சர்வாதிகாரம்?

மேற்கில் இஸ்ரேல் ஆதரவு சர்வாதிகாரம்?

வடகொரியாவின் அதிபர் Kim Jong Un க்கு எதிராக அங்கு ஒருவர் பேசினால் அவர் அங்கு அழிவார். ரஷ்யாவில் ஒருவர் பூட்டினுக்கு எதிராக பேசினால் அவர் அங்கு அழிவர். சீனாவில் ஒருவர் சீக்கு எதிராக பேசினால் அவர் அழிவர். அதனால் இந்த நாடுகளை எல்லாம் சர்வாதிகளின் நாடுகள் என்று கூறுகின்றன மேற்கு நாடுகள். ஆனால் இந்த மேற்கு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக ஒருவர் பேசினால் அவர் அழிவர் என்று ஒரு விமசகர் அண்மையில் கூறி மேற்கின் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த உண்மைக்கு உடந்தையாக தற்போது பல உதாரண சம்பவங்கள் பகிரங்கத்துக்கு வந்தவண்ணம் உள்ளன.

அமெரிக்காவில் வாழும் Viet Thanh Nguyen என்ற வியட்நாமிய எழுத்தாளர் எழுதிய The Sympathizer என்ற நாவல் 2016ம் ஆண்டு Pulitzer Prize என்ற பரிசை வென்று இருந்தது. அந்த வெற்றியின் பின் அவர் பல இடங்களில் உரையாற்றி உள்ளார். 

நேற்று நியூ யார்க்கில் உள்ள 92nd Street Y literary center யிலும் மாலை 8:00 மணிக்கு இவர் உரையாற்ற ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. அனால் அந்த உரையை அமைப்பாளர் மலை 3:00 மணிக்கு இடைநிறுத்தி உள்ளனர். காரணம் இவரும் வேறு சிலரும் Instagram பதிவு ஒன்றில் காசா மக்கள் மீதான கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியதே.

Dr. Ben Thomson என்பவரை கனடாவின் Toronto நகரை அண்டிய Richmond Hill பகுதியில் உள்ள Mackenzie Richmond Hill Hospital பதவியில் இருந்து நீக்கியுள்ளது. காரணம் இவர் தனது Twitter/X பதிவில் ஹமாஸின் தாக்குதலின் போது “No babies were beheaded, there have been no confirmed rape” என்றும் “Palestinians are experiencing genocide and war crime” என்றும் அக்டோபர் 10ம் திகதி கூறியமையே.

Josh Paul என்ற அமெரிக்கர் 11 ஆண்டுகளாக Director of Congressional and Public Affairs ஆக கடமை ஆற்றியவர். இவரின் பணி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க ஆயுதங்களை கண்காணிப்பதே.

இவர் அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் அப்பாவி பலஸ்தீனரை அழிப்பதற்கு உடந்தையாக இருக்க மாட்டேன் என்று கூறி பதவி விலகி உள்ளார். அவர் தானாக முன்வந்து பதவி விலகினாலும் அவர் மீது கடுமையான வசை பாடலை செய்து வருகின்றனர் சகபாடிகளும், அரசியல்வாதிகளும்.

Paddy Cosgrave என்பவர் Web Summit என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்து அதன் CEO ஆக பணி ஆற்றியவர். இவரை Google, Meta/Facebook, Amazon, Intel ஆகிய நிறுவனங்கள் பதவியிலிருந்து விலக்கி உள்ளன. காரணம் அவர் “War crime are war crime even when committed by allies” என்று இஸ்ரேலை சாடியமையே.

Karim Mostafa Benzema என்ற பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் காஸாவில் “unjust bombing which spare no women or children” என்று Tweeter பதிவில் கூறிய பின் பிரான்சின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் Gerald Darmanin Benzema கால்பந்தாட்ட வீரர் ஒரு Muslim Brotherhood அமைப்பை சார்ந்தவர் என்று ஆதாரம் இன்றி கூறியுள்ளார். Banzema தற்போது சவுதி அணியில் விளையாடுகிறார்.

அமெரிக்காவின் Chicago நகரில் சர்வதேச உணவு நிறுவனமான McDonald’s இஸ்ரேலின் கொடி பதித்த சரைகளில் தனது உணவை வழங்கி இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவிக்கிறது. வேறு எந்த இனத்துக்கு McDonald’s இவ்வாறு ஆதரவு தெரிவித்தது?

Wexner Foundation என்ற செல்வந்த அமெரிக்க யூத அமைப்பு Harvard University க்கு நன்கொடை வழங்குவதை நிறுத்துவதாக கூறியுள்ளது. காரணம் இந்த பல்கலைக்கழகமும் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவை வழங்கவில்லை என்பதே.

University of Pennsylvania President இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்காததாலும், அங்கு பலஸ்தீனர் அமர்வு ஒன்றை நிகழ்த்த அனுமதித்ததாலும் David Magerman என்ற அமெரிக்க செல்வந்தர் தான் மேற்கொண்டு இந்த பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை வழங்கேன் என்று கூறியுள்ளார்.

Marc Jeffrey Rowan என்ற செல்வந்தரும் மேற்படி பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை வழங்குவதை நிறுத்துவதாக கூறியுள்ளார். இவர் 2018ம் ஆண்டு Wharton School க்கு $50 மில்லியன் நன்கொடை வழங்கியவர்.

இவை சில பகிரங்கமான உதாரணங்களே. சிறிய, பகிரங்கம் ஆகாத உதாரணங்கள் பல இருக்கும்.

அப்படியானால் வட கொரியா போன்ற நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?