காசா நகரில் உள்ள Al Ahli என்ற வைத்தியசாலை மீது செய்யப்பட்ட தாக்குதலுக்கு சுமார் 500 பேர் பலியாகி உள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேலின் யுத்த விமானங்கள் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் தாம் வைத்தியசாலையை தாக்கவில்லை என்றும், பலஸ்தீனர் மத்தியில் இயங்கும் Islamic Jihad ஏவிய கணையே தவறி வைத்தியசாலையில் விழுந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
எகிப்து, ஈரான், சிரியா, சவுதி ஆகிய நாடுகள் தாக்குதலை வன்மையாக கண்டித்து உள்ளன. ஜோர்டான் அரசர் இந்த தாக்குதலை war crime என்று கூறியுள்ளார். UAE ரஷ்யாவுடன் இணைந்து உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட அழைத்துள்ளது.
பைடெனின் வெள்ளை மாளிகை வைத்தியசாலை தாக்குதல் தொடர்பான கருத்துக்கள் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
வைத்தியசாலை தாக்குதல் காரணமாக பலஸ்தீன சனாதிபதி அபாஸ் பைடெனை சந்திக்கும் நிகழ்வை இடைநிறுத்தி உள்ளார்.
Al Ahli Baptist Hospital என்ற இந்த வைத்தியசாலை Baptist தேவாலயம் ஒன்றே இயக்குகிறது.