அமெரிக்க சனாதிபதி பைடென் புதன்கிழமை இஸ்ரேல் செல்கிறார். பைடெனின் பயணம் அமெரிக்காவின் இஸ்ரேல் உடனான நெருக்கத்தை காட்டவும், காசா மக்களுக்கு உதவிகளை செய்யவும் என்கிறார் தேசிய பாதுகாப்பு செயலாளர் John Kirby.
பைடென் ஜோர்டான் (Jordan) தலைநகர் அம்மானுக்கும் பயணிப்பார் என்று கூறப்படுகிறது. அம்மானில் King Abdullah, எகிப்தின் சனாதிபதி சிசி, பலஸ்தீன் சனாதிபதி அபாஸ் ஆகியோரை பைடென் சந்திப்பார்.
ஹமாஸ் 155 முதல் 199 வரையான இஸ்ரேலியர்களை பணயம் வைத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலின் இராணுவ நகர்வு பணயம் உள்ளோரை பலியாக்கலாம் என்ற பயம் இஸ்ரேலியர்களின் உள்ளது.
களத்து நிலைமைகளை பைடென் பெரிய அளவில் மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டிருக்கவில்லை. இவரின் பயணம் யுத்தத்தில் எவ்வளவு மாற்றத்தை செய்யும் என்பதை பயணத்தின் பின்னரே அறியலாம்.
அமெரிக்கா ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி உள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியோர் இஸ்ரேல் மீது சமகால யுத்தத்தை ஆரம்பிக்காமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த மிரட்டல்.
அமெரிக்காவில் பிரபலம் குறைந்து வரும் பைடென் அடுத்த ஆண்டு சனாதிபதி தேர்தலையும் சந்திக்கவுள்ளார். இவரின் பதவி மீண்டும் ரம்பிடம் பறிபோகும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது.