சனிக்கிழமை ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த தாக்குதல் 50 ஆண்டு காலத்தில் இஸ்ரேல் மீது செய்யப்பட்ட மிக பெரிய தாக்குதலாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு மரணித்த யூதர் தொகை 300 என்றும் காயமடைந்தோர் தொகை 1,500 கூறப்படுகிறது.
மேலும் பல யூதர்களும், இஸ்ரேல் படையினரும் ஹமாஸால் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் ஆக்கிரமித்து உள்ள யூத நகரங்களிலும், சிலர் காசா பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது ஒரு இஸ்ரேல் போலீஸ் நிலையத்தை ஹமாஸ் உறுப்பினர் கைப்பற்றி உள்ளனர். அதை இஸ்ரேல் படைகள் சூழ்ந்துள்ளன.
ஹமாஸ் இஸ்ரேல் படையினரையும், மக்களையும் கைப்பற்றி உள்ளதை இஸ்ரேல் ஏற்றுகொண்டுளாலும் தொகை விபரங்கள் வெளியிடப்படவில்லை.
காசா எல்லை வேலிகளை உடைத்து தரை மூலமும், பறக்க உதவும் hang glider கள் மூலம் வான் வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள இடங்களுக்கு சென்ற ஹமாஸ் இந்த திடீர் தாக்குதல்களை செய்துள்ளது.
ஹமாஸ் இந்த வல்லமையை கொண்டிருக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்த்திருக்கவில்லை.
இஸ்ரேல் தற்போது காசா மீது தாக்குதல் செய்து வருகிறது. இதுவரை குறைந்தது 232 பலஸ்தீனர் பலியாகியும், 1,600 பேர் காயமடைந்தும் உள்ளனர்.