Gaza பகுதியை ஆளும் பலஸ்தீனர் ஆயுத குழுவான ஹமாஸ் (Hamas) இஸ்ரேலுள் இரகசியமாக நுழைந்து செய்த தாக்குதலுக்கு குறைந்தது 40 யூதர் பலியாகியும், 800 யூதர் காயமடைந்தும் உள்ளனர்.
ஹமாஸின் இந்த செயலால் தாம் யுத்தத்தில் உள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் நெட்யன்யாகு கூறியுள்ளார்.
ஹமாஸ் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் இஸ்ரேலுள் ஏவியுள்ளது.
இஸ்ரேல் தாம் பதிலுக்கு 17 ஹமாஸ் நிலையங்களை தாக்கியுள்ளதாக கூறுகிறது.
இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள Ofakim என்ற நகரில் சில யூதர்களை ஹமாஸ் பணயம் வைத்துள்ளதாக Reshet 13 என்ற இஸ்ரேல் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களை விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள Sderot என்ற இடத்து வீதிகளில் ஹமாஸ் உறுப்பினர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தாம் 57 யூதர்களை கைப்பற்றி உள்ளதாகவும் கூறுகிறது ஹமாஸ்.
ஹாமாஸ் தாம் இஸ்ரேல் படையினரை கைது செய்துள்ளதாக கூறி, 3 படையினரை வீடியோ ஒன்றில் காட்டியும் உள்ளது.
ஹமாஸ் எவ்வாறு இஸ்ரேலுள் நுழைந்தது என்பதை அறிய இஸ்ரேல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த யுத்தம் பல தினங்களுக்கு நீடிக்கும் சந்தர்ப்பம் உண்டு.